தனுஷுக்காக ஆனந்தியை அணுகவே இல்லையே... வேல்ராஜ் விளக்கம்

சென்னை: ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் தனுஷின் ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார்.

இந்நிலையில், வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அப்படக் குழுவினர் இணைய உள்ளனர். அமலாபாலுக்கு திருமணமாகி விட்டதால் பிரபு சாலமனின் கயல் படத்தில் நடித்து வரும் கயல் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், இத்தகவலை மறுத்துள்ளார் வேல்ராஜ். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-

உண்மை தான்...

உண்மை தான்...

‘வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு பிறகு தனுஷுடன் இணைந்து பணியாற்றவுள்ளது உண்மையான செய்திதான்.

வதந்தி...

வதந்தி...

ஆனால், இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஆனந்தியை அணுகவில்லை. அது வெறும் வதந்தியே.

தனுஷுக்குப் பிடித்து விட்டது...

தனுஷுக்குப் பிடித்து விட்டது...

தற்போது இப்படத்தின் கதையை உருவாக்கும் பணியை தொடங்கியிருக்கிறேன். இப்படத்தின் ஒருவரிக் கதையை தனுஷுக்கு சொன்னதுமே பிடித்துப் போய்விட்டது.

பாடல்கள் பேசப்படும்...

பாடல்கள் பேசப்படும்...

‘வேலையில்லா பட்டதாரி' படம்போல் இப்படமும் ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல், காமெடி என கலந்து இருக்கும். ‘வேலையில்லா பட்டதாரி' படப் பாடல்கள் போல் இப்படத்திலும் அனிருத்தின் இசை பேசப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X