’குட்டி நயன்தாரா’ அனிகாவின் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? அந்த பிரபல பாடலின் டைட்டில் தானாம்!

சென்னை: நடிகை நயன்தாராவுக்கு மகளாக சில படங்களில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன், இப்போ ஹீரோயினாக அவதாரமெடுத்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கப்பேலா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் டோலிவுட்டில் நாயகியாக அனிகா அறிமுகமாகவுள்ளார்.

அந்த படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல் ஒன்றின் தொடக்க வரிகளையே டைட்டிலாக வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பேபி அனிகா

பேபி அனிகா

சோட்டா மும்பை எனும் படத்தில் முதன்முறையாக நடித்திருந்தாலும், அனிகா சுரேந்திரனின் அதிகாரப்பூர்வ அறிமுக படமாக 2010ம் ஆண்டு வெளியான கதா துடருனு படம் தான் அவரை குழந்தை நட்சத்திரமாக பிரபலப்படுத்தியது. தொடர்ந்து மலையாளத்தில் 9 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னரே, அஜித் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அஜித்தின் ரீல் மகள்

அஜித்தின் ரீல் மகள்

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அனுஷ்கா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா சுரேந்திரன் நடித்து இருந்தார். பின்னர் 2019ம் ஆண்டு ஆஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தார். தல அஜித்தின் ரீல் மகளாகவே அனிகா பார்க்கப்படுகிறார்.

குட்டி நயன்தாரா

குட்டி நயன்தாரா

மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நயனின் மகளாக நடித்த அனிகா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் குட்டி நயன்தாராவாக நடித்து அசத்தினார். இப்போ பார்ப்பதற்கு அச்சு அசல் நயன் போலவே இருக்கும் அனிகாவை பலரும் குட்டி நயன் என்றே அழைத்து வருகின்றனர்.

ஹீரோயின் அனிகா

ஹீரோயின் அனிகா

பேபி அனிகாவாக வலம் வந்த இவர், இப்போ ஹீரோயினாக மாறியுள்ளார். இயக்குநர் முஸ்தபா இயக்கத்தில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான கப்பேலா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடித்து வருகிறார் அனிகா சுரேந்திரன். வெறும் 16 வயதே நிரம்பியுள்ள அனிகா அதற்குள் ஹீரோயின் ஆக மாறியிருப்பதை பலரும் வரவேற்று வருகின்றனர்.

படத்தின் டைட்டில் என்ன

படத்தின் டைட்டில் என்ன

விரைவிலே வெளியாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அலா வைகுந்த புறமுலோ படத்தின் சூப்பர் ஹிட் பாடலான புட்ட பொம்மா என்கிற வரிகளையே அனிகாவின் படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளார்களாம்.

Recommended Video

Queen web series Tamil | Reel & Real Characters | Gautam Vasedev Menon
புட்டபொம்மா

புட்டபொம்மா

டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அந்த பாடல் மிகவும் பிரபலமாகி உள்ள நிலையில், அனிகாவின் அறிமுகப்படத்திற்கு இப்படியொரு டைட்டில் வைத்தால், ஆரம்பமே எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்பதே படக்குழுவினரின் கருத்தாக உள்ளது என்கின்றனர். கூடிய விரைவிலேயே ஃபர்ஸ்ட் லுக்குடன் டைட்டில் அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X