காதலர் டார்ச்சர்.. பொய் சொல்லிவிட்டு படப்பிடிப்பில் இருந்து எஸ்ஸான நடிகை.. கடைசில வட போச்சே!
காதலரின் டார்ச்சர் தாங்க முடியாமல், பாப்பிலோன் படத்தில் இருந்து ஹீரோயின் ஒருவர் ஓடிவிட்டாராம்.
Recommended Video
சென்னை: காதலரின் டார்ச்சர் தாங்க முடியாமல், ஹீரோயின் ஒருவர் படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே ஓடிவிட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணியிடம் உதவியாளராக வேலை செய்தவர் ஆறு ராஜா. ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.

ஆறு ராஜா தற்போது தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் பாப்பிலோன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். இவர்களுடன் சௌமியா, ரேகா சுரேஷ், பூ ராமு, அபிநயா, கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பாப்பிலோன் படத்தில் ஸ்வேதா ஜோயலுக்கு முன்னர் வேறு ஒருவர் தான் நாயகியாக ஒப்பந்தம் ஆனாராம். படப்பிடிப்பு ஆரம்பித்த இரண்டாவது நாளில், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி கிளம்பி சென்றுவிட்டாராம் அவர்.
அதன் பிறகு படப்பிடிப்புக்கு அவர் வரவே இல்லை. என்ன என்று விசாரித்த போது, தனது காதலர் தந்த டார்ச்சர் காரணமாக தான் அவர் படப்பிடிப்பில் இருந்து உடனடியாக ஓடியிருக்கிறார் என்பது தெரியவந்தது. இதையடுத்து தான் ஸ்வேதாவை ஹீரோயினாக்கி உள்ளனர்.
படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே பலருக்கும் குதிரைக்கொம்பாக உள்ள நிலையில், கிடைத்த வாய்ப்பை காதலரின் ஈகோவால், இப்படி உதறி விட்டு சென்று விட்டாரே என அந்த நடிகையைப் பார்த்து மற்றவர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











