»   »  ஹீரோக்களுக்கு இணையான சம்பளம்... இப்ப ஹீரோயின்கள் ரேஞ்சே வேற!

ஹீரோக்களுக்கு இணையான சம்பளம்... இப்ப ஹீரோயின்கள் ரேஞ்சே வேற!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹீரோக்களுக்கு இணையான ஹீரோயின்கள் சம்பளம்...

தமிழ் சினிமாவில் எப்போதுமே நாயகிகளுக்கு சம்பளம் குறைவு என்ற புலம்பல்கள் உண்டு. ஆனால் இன்றைக்கு அது வெகுவாகக் குறைந்திருக்கிறது. புதுமுக நாயகிகளுக்கு இன்னும் சம்பளம் ஒரு பெரிய பிரச்சினைதான். அட்ஜெஸ்ட்மென்டைப் பொறுத்தே அது முடிவாகிறது.

ஆனால் பெரிய நாயகிகளின் சம்பளம், ஹீரோக்களுக்கு இணையாக உயர்ந்துவிட்டது.

புதிய சம்பள பட்டியல் விகிதத்தில் நயன்தாராவும் அனுஷ்காவும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் சம்பளம் ரூ.5 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

நயன்தாரா

நயன்தாரா

சாதாரணமாக அறிமுகமான நயன்தாரா ஆரம்பத்தில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கினார். அதன் பிறகு அவரது படங்கள் வெற்றி பெற்றதால் ரூ.2 கோடியாக உயர்ந்தது. கதாநாயகன் இல்லாத அறம் படத்தில் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படமும் வெற்றி பெற்றது. தற்போது அவர் கைவசம் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் உள்ளன. தெலுங்கு படமொன்றிலும் நடிக்கிறார். அஜித்குமார் ஜோடியாக விசுவாசம் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்துக்கு அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்காவின் மார்க்கெட் பாகுபலி படத்துக்கு பிறகு தாறுமாறாக உயர்ந்தது. அதற்கு முன்பு ரூ.2 கோடி, ரூ.3 கோடி என்று வாங்கி வந்தார். பாகுபலி-2 படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. சமீபத்தில் வெளியான பாகமதி படமும் லாபம் பார்த்துள்ளது. இதனால் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்திவிட்டார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் ரூ.1.5 கோடி வாங்கி வந்தார். அவரது சம்பளம் இப்போது ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.

தமன்னா

தமன்னா

தமன்னாவும் சம்பளத்தை ரூ.1.5 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தி உள்ளார். அவரது மார்க்கெட் தமிழ், தெலுங்கில் ஸ்டெடியாகவே உள்ளது.

சமந்தா

சமந்தா

சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவரது சம்பளம் ரூ.2 கோடியாக உள்ளது.

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் பிரீத் சிங் வளரும் நடிகையாக இருக்கிறார். கார்த்தி ஜோடியாக இவர் நடித்து திரைக்கு வந்த தீரன் அதிகாரம் ஒன்று வெற்றிக்குப் பிறகு இவர் சம்பளம் ரூ.1.5 கோடியாக உயர்ந்துள்ளது.

அமலா பால், கீர்த்தி

அமலா பால், கீர்த்தி

அமலா பால் ரூ.2 கோடி கேட்கிறார். கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வாங்குகிறார். த்ரிஷா ரூ.1.5 கோடி வரை கேட்கிறார்.

English summary
Here is the list of heroines salaries in Tamil cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil