ஓவர் மேக்கப்பில் வந்த குஷ்பு... பேய் என நினைத்து அலறி ஓடிய ஊர்மக்கள்... ஷூட்டிங்கில் பரபரப்பு!
ஆறிலிருந்து ஆறுவரை படத்தின் படப்பிடிப்பில் ஹீரோயினை பேய் என நினைத்து ஊர் மக்கள் அலறியடித்து ஓடியிருக்கிறார்கள்.
சென்னை: அறிமுக நாயகி குஷ்புவை பேய் என நினைத்து ஊர் மக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் வெளிவந்துள்ளது.
ஆர்.எப்.ஐ நிறுவனம் சார்பில் வி.பி.ஆர். தயாரித்துள்ள புதிய திரைப்படம் 'ஆறிலிருந்து ஆறுவரை'. அறிமுக இயக்குனர் ஸ்ரீஹரி இயக்கியுள்ள இப்படத்தில், புதுமுகங்கள் கௌசிக், குஷ்பு சிங் நாயகன், நாயகியாக அறிமுகமாகின்றனர்.
மேலும் ஜெயப்பிரகாஷ், ஜார்ஜ், மிப்புசாமி, 'லொல்லு சபா' மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். பெண் இசையமைப்பாளர் ஜீவா வர்ஷினி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் ஆறிலிருந்து ஆறுவரை படக்குழுவினர் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தெரியவந்தது.

சுவாரஸ்யமான சம்பவம்
இந்த படம் மாலை ஆறு மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. சிலரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், பழிக்கு பழி வாங்கும் இந்த கதையில் பேய் சப்ஜெக்ட்டும் உண்டு.

பேய் சீன்
இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு அருகில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடந்தது. ஹீரோயின் பேய் கெட்டப்பில் மாடிப்படியில் இருந்து இறங்கி வரும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.

மேக்கப்பில் குஷ்பு
ஹீரோயின் குஷ்பு சிங் ஒருபுறம் இருக்க, அவருக்கு எதிர்புறம் தொலை தூரத்தில் இருந்து கேமரா மேன் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார். எனவே இருள் சூழ்ந்த அந்த இடத்தில் திகில் எபெக்ட் லைட்டிங்கில் ஹீரோயின் குஷ்பு பேய் மேக்கப்பில் நடந்து வந்திருக்கிறார். எதர்ச்சையாக அந்த பக்கம் வந்த ஊர் மக்கள் சிலர், ஹீரோயின் குஷ்புவை உண்மையான பேய் என நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்திருக்கிறார்கள்.

படக்குழு நிம்மதி
ஏன் இவர்கள் இப்படி ஓடுகிறார்கள், என்ன ஆனது என குழம்பிய படக்குழுவினருக்கு சிறிது நேரம் கழித்து தான் புரிந்திருக்கிறது ஹீரோயின் குஷ்புவை பேய் என நம்பி அவர்கள் ஓடியிருக்கிறார்கள் என்பது. இதையடுத்து படக்குழுவினர் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள். நல்ல வேளை சாமியாடிகளை அழைத்து வந்து சவுக்கடி கொடுக்காமல் போனார்களே என நிம்மதி பெருமூச்சுவிட்டார்களாம் படக்குழுவினர்.


Click it and Unblock the Notifications











