twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோயின் இல்லாமல்... இந்த இயக்குநர்களால் படமெடுக்கவே முடியாது

    By Manjula
    |

    சென்னை: அதிரடி ஆக்ஷன், ஹீரோவைச் சுற்றி நகரும் கதை முக்கியமாக ஹீரோயிசம் இல்லாமல் தமிழ் சினிமாக்களை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

    அதேபோல கதையே இல்லாவிட்டாலும் கூட, தங்களின் அபிமான நடிகருக்காக சுமார் படத்தையும் ரசிகர்கள் சூப்பர் ஹிட்டாக மாற்றி விடுவதுண்டு.

    இந்த ஹீரோயிசங்களுக்கு மத்தியில் என்னுடைய படத்தில் நாயகிகள் தான் ஆணிவேர், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படமெடுப்பேன் என்று உறுதி காட்டும் இயக்குநர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் போற்றத்தகுந்த இயக்குநர்களை இங்கே பார்க்கலாம்.

    பாலச்சந்தர்

    பாலச்சந்தர்

    இயக்குநர் சிகரம் என்று போற்றப்பட்ட பாலச்சந்தர் அவர்கள் பெண்களை மையப்படுத்தி ஏராளமான படங்களை எடுத்திருக்கிறார். அவள் ஒரு தொடர்கதை, அச்சமில்லை அச்சமில்லை, மனதில் உறுதி வேண்டும், கல்கி என்று இவர் இயக்கத்தில் வெளியான படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதிலும் 29 வருடங்களுக்கு முன் வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படம், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்திப் போவதை என்னவென்று சொல்வது.

    பாரதிராஜா

    பாரதிராஜா

    இயக்குநர் இமயம் என்று புகழப்படும் பராதிராஜா பெண்களைப் போற்றிய இயக்குநர்களில் தலையானவர். கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, 16 வயதினிலே, மண்வாசனை, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை என்று பெண்களை மையமாகக் கொண்ட படங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டவர் பாரதிராஜா.குறிப்பாக கருத்தம்மா பெண் சிசுக்கொலைக்கு எதிரான ஒரு அழுத்தமான படமாக இன்றளவும் போற்றப்படுகிறது. ரேவதி, ராதா, ராதிகா என்று நடிகைகளின் உண்மையான பெயரை மாற்றி அமைத்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். இவரின் பெயர் மாற்றத்தில் பிரியாமணி, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் மட்டும் எப்படியோ தப்பித்து விட்டார்கள்.

    மணி ரத்னம்

    மணி ரத்னம்

    நாயகிகளின் இயக்குநர் என்ற பட்டம் முழுவதும் பொருந்திப் போகிற ஒரே இயக்குநர் அநேகமாக இவராக மட்டும் தான் இருப்பார். மவுன ராகம் தொடங்கி நேற்று வந்த ஓ காதல் கண்மணி வரை எல்லாப் படங்களிலும் நாயகிகளின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும். மவுன ராகம், அஞ்சலி, ரோஜா, இந்திரா, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மணி ஆகியவை இந்த வரிசையில் அடக்கம். இன்றும் கூட பெண்கள் இரண்டொரு வார்த்தைகளில் பதிலளித்தால் பெரிய மணிரத்னம் ஹீரோயின் என்று ஆண்கள் கலாய்ப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    கவுதம் மேனன்

    கவுதம் மேனன்

    ரசிகர்கள் திணறத் திணற ஆக்ஷன் கதை எடுத்தாலும் கூட, அதில் பெண்களுக்கான பகுதிகளை அழகாக காட்டி விடுவதில் கவுதம் மேனன் கைதேர்ந்தவர். பெண் உறவினர் ஒருவரின் வாழ்க்கை ஏற்படுத்திய தாக்கத்தால் இன்றளவும் தனது படங்களில் ஹீரோக்கள், ஹீரோயினை 2 வது திருமணம் செய்வது போலவே காட்டி வருகிறார். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால் என்று இவரின் ஹீரோயின் ஸ்பெஷல் படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    பிரபு சாலமன்

    பிரபு சாலமன்

    தற்போதைய இயக்குநர்களில் பிரபு சாலமன் நாயகிகளின் இயக்குநராக இருக்கிறார். மைனா, கயல் என்று பெண்களின் பெயர்களையே படத்திற்கு தலைப்பாக வைக்கக் கூடியவர். மைனா, கயல், கும்கி என்று இவரின் படங்களும் பெண்களை மையப்படுத்தியே இருக்கும். கயல் தோல்வியால் தற்போது பெரிய நடிகர்களின் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறார். மீண்டும் பெண்களை மையப்படுத்திய படங்களை எடுப்பாரா? என்பது அவருக்கே வெளிச்சம்.

    English summary
    Women's Day Special: Heroine Special Directors List in Tamil Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X