நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவர் பிரபாஸ்... தமன்னா நெகிழ்ச்சி!
சென்னை : நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவர் பிரபாஸ் என்று நடிகை தமன்னா அவரை வெகுவாக புகழ்ந்துள்ளார்.
பாகுபலி படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு சிறந்த நடிகர் என பெயர் எடுத்துள்ளார் பிரபாஸ்.
தற்போது இவர்,ஆதிபுருஷ், சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயண இதிகாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

ஆதிபுருஷ்
ஆதிபுருஷ் திரைப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதாவாகவும் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் ஓம் ராவத் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து வந்த கடுமையான விமர்சனத்தால், படத்தின் ரிலீஸ் ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பிரபாஸின் விருந்தோம்பல் உலகளாவியது
அண்மையில் நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில், பிரபாஸின் விருந்தோம்பம் குறித்து நெகிழ்ந்து பேசி உள்ளார். பிரபாஸின் விருந்தோம்பல் என்பது உலகளாவியது, உணவு மேஜையின் மீது பிரம்மாண்டமான அளவில் முப்பதிற்கும் மேற்பட்ட உணவு வகைகள் வைக்கப்பட்டு இருக்கும். அதை பார்ப்பதற்கு மாயஜால படத்தில் பார்ப்பது போலஇருக்கும்.இது பிரபாஸ் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது.

மகாராஜாவிற்கு இணையானவர் பிரபாஸ்
எளிமையாக சொல்லவேண்டும் என்றால், பிரபாஸ் தனது படங்களில் ராஜாவாக நடித்தார், ஆனால் நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு ராஜாவைப் போலவே இருக்கிறார். சகமனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நன்று அறிந்தவர் பிரபாஸ். அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன் பணியாற்றும் சக நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவர் மீதும் அவர் காட்டும் அக்கறையுடன் கூடிய அரவணைப்பு அலாதியானது என்றார்.

நெகிழ்ந்த தமன்னா
அவரின் பண்பும் விருந்தும் எனக்கு மட்டும் தெரிந்தது இல்லை அவருடன் இணைந்து நடித்த பலரும் நன்றி தெரிந்து இருக்கும். இந்த விருந்தோம்பல் பண்பு அவருடன் பணியாற்றும் சூழலை எப்போதும் இதமாக வைத்திருக்கிறது என்று நடிகை தமன்னா நெகிழ்ந்து கூறினார். தமன்னா கூறியது போலவே,நடிகை ஷ்ரத்தா கபூர், பூஜா ஹெக்டே, பாக்யஸ்ரீ, ஸ்ருதி ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் உட்பட நடிகர்கள் வீட்டின் ஆடம்பரமாகப் பரப்பி வைக்கப்பட்டிருந்த விருந்தை புகைப்படமாக பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











