ஆண்கள் வர்ணிச்சா பரவாயில்லை... நடிகைகளே இன்னொரு நடிகையின் அழகை வர்ணிச்சா..?

By Vignesh Selvaraj

Recommended Video

80-களின் முன்னணி ஹீரோயின்கள் பலரும் புகழ்ந்த ஜெயப்ரதாவின் அழகு

சென்னை : தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான படங்களில் நடித்திருந்தாலும் நடிகை ஜெயப்பிரதாவிற்கு ஒரு காலத்தில் நிறையவே ரசிகர்கள் இருந்தார்கள்.

அரசியலில் புகுந்து எம்.பி-யான ஜெயப்ரதா தற்போது 'கேணி' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

'கேணி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீனியர் நடிகைகள் பலர் ஜெயப்ரதாவின் அழகைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

'கேணி' படம்

'கேணி' படம்

பார்த்திபன், பசுபதி, நாசர், ரேவதி, அர்ச்சனா, அனுஹாசன், ஜெயப்ரதா என பலர் நடிக்கும் திரைப்படம் 'கேணி'. மலையாள இயக்குநர் எம்.ஏ.நிஷாத் இயக்கும் 'கிணர்' படத்தின் தமிழ் வெர்சன் தான் இந்த 'கேணி'. குடிதண்ணீர் பிரச்னையை மையமாகக் கொண்டது இந்தப் படம்.

கேணி இசை வெளியீட்டு விழா

கேணி இசை வெளியீட்டு விழா

'கேணி' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. படத்தில் அவருடன் நடிக்கும் ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக சுஹாசினியும் கலந்து கொண்டார்.

ஜெயப்ரதா அழகு

ஜெயப்ரதா அழகு

40 வயதைக் கடந்தவர்களைக் கேட்டால் ஜெயப்பிரதாவின் அழகைப் பற்றி உண்மையிலேயே வர்ணித்துப் பேசுவார்கள். நிகழ்ச்சியில் பேசிய 80-களின் முன்னணி ஹீரோயின்கள் பலர் ஜெயப்பிரதாவின் அழகை அளவுக்கதிகமாகவே பாராட்டிப் பேசினார்கள்.

அழகை வர்ணித்த நடிகைகள்

அழகை வர்ணித்த நடிகைகள்

ஆண்கள் ஜெயப்பிரதாவின் அழகை வர்ணித்துப் பேசினால் பரவாயில்லை. ஆனால், பெண்கள், அதிலும் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயின்களாக இருந்தவர்களே அவரது அழகைப் பற்றிப் பேசி வியக்க வைத்திருக்கிறார்கள்.

ஜெயப்ரதா

ஜெயப்ரதா

அழகான நடிகைகளே மற்றொரு சீனியர் நடிகையின் அழகைப் பாராட்டிப் பேசியது ஆச்சரியமாக இருந்தது. அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள அனைவருமே ஆர்வம் காட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X