ஏழுமலையான தரிசிக்க வந்த சினேகா, தீபிகா படுகோனே, ஜூகிசாவ்லா: ரசிகர்கள் குவிந்தனர்

By Mayura Akilan

திருப்பதி: ஸ்ரீ ராமநவமியை ஒட்டி திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான நேற்று பாலிவுட், கோலிவுட் நடிகைகள் தரிசனம் செய்தனர். அவர்களைக் காண ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பிரம்மோற்சவம், திருவிழா நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.

ஸ்ரீ ராமநவமி

ஸ்ரீ ராமநவமி

திருமலையில் ஸ்ரீராமநவமியை உற்சவம் மிக கோலாகலமாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த உற்ஸவத்தில் ஒரு பாகமாக காலை 7 மணி முதல் 8 மணி வரை ஸ்ரீசீதா ராம லட்சுமணருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மாலை 7 மணி முதல் 9 மணி வரை மாட வீதியில் அனுமந்த வாகன சேவையும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீராம நவமி ஆஸ்தானமும் நடைபெற்றது.

சினேகா – பிரசன்னா

சினேகா – பிரசன்னா

தமிழ் நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னா உடன் தம்பதி சமேதராக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். காலையில் நடந்த சுப்ரபாத சேவையின்போது இவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜூகி சாவ்லா

ஜூகி சாவ்லா

இதே தரிசன நேரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா ஏழுமலையானை தரிசித்தார். திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தவுடன் ஒரு சக்தி கிடைத்ததாக உணர்ந்தேன். சொல்ல முடியாத அளவுக்கு திருப்தி கிடைத்தது. அதனால்தான் கோடான கோடி பேர் ஏழுமலையான் கோவிலுக்கு வருகிறார்கள் என்றார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

நைவேத்திய இடைவெளியின் போது நடிகை தீபிகா படுகோனே தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு ஆலய நிர்வாகிகள் தரிசனத்துக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினார்கள்.

ரசிகர்கள் கூட்டம்

ரசிகர்கள் கூட்டம்

தரிசனம் முடிந்த பின்னர் வெளியே வந்த தீபிகா படுகோனேவைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது. கைகுலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X