twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹே ராம் படத்தில் ரஜினி பட வில்லன் நடித்த காட்சிகள் நீக்கம்!

    |

    சென்னை: நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படம் ஹே ராம்

    2000 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

    அந்த படத்தில் கமல்ஹாசன் , ஷாரூக்கான்,ராணி முகர்ஜி, நாசர், ஹேமாமாலினி ஆகியோருடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

    திடீரென வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு குடிபுகுந்த சமந்தா.. என்ன விஷயம் தெரியுமா?திடீரென வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு குடிபுகுந்த சமந்தா.. என்ன விஷயம் தெரியுமா?

    ஹாட்ரிக் வெற்றிகளை

    ஹாட்ரிக் வெற்றிகளை

    நடிகர் கமல்ஹாசன் இப்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் மாஸ்டர், மாநகரம், கைதி என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணைந்துள்ளது இந்திய அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேறுவிதமான கமல்ஹாசனை

    வேறுவிதமான கமல்ஹாசனை

    முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைகளத்தில் வேறுவிதமான கமல்ஹாசனை இந்த படத்தில் தயார் செய்து வருவதால் இந்த படத்தின் பிசினஸ் பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளது. இதில் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை சிவானி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது

    இந்து முஸ்லிம் மதகலவரத்தை

    இந்து முஸ்லிம் மதகலவரத்தை

    சினிமாவில் எத்தனை கலைகள் உள்ளதோ அத்தனை கலைகளையும் கரைத்துக் குடித்து தலை சிறந்த கலைஞனாக உள்ள கமல்ஹாசன் காலத்தால் அழியாத பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி நடித்துள்ளார். கமல்ஹாசன் இயக்கிய பல படங்கள் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வரிசையில் காலங்காலமாக இந்தியாவில் நடைபெற்று வரும் இந்து முஸ்லிம் மதகலவரத்தை மையப்படுத்தி உருவான திரைப்படம் ஹே ராம்.

    நவாசுதீன் சித்திக்

    நவாசுதீன் சித்திக்

    2000 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன்,ஷாருக்கான், ராணி முகர்ஜி ஹேமாமாலினி, நாசர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து இருந்தனர். படம் வெளியான போது பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானது. இன்று வரை இந்திய அளவில் பேசப்படும் மிகச் சிறந்த திரைப்படமாக ஹே ராம் உள்ளது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் இயக்கி இருப்பார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

    காட்சிகள் நீக்கப்பட்டு விட்டது

    காட்சிகள் நீக்கப்பட்டு விட்டது

    ஹே ராம் படத்தில் கமல்ஹாசனுக்கு உதவியாளராக பணிபுரிந்த நவாசுதீன் இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் படத்தின் நீளம் காரணமாக நவாசுதீன் நடித்த அந்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டது. ஹே ராம் படத்தில் தான் நடித்துள்ளதாக ஆசை ஆசையாக படத்தை திரையில் கண்ட நவாசுதீன் தனது காட்சி நீக்கப்பட்டது அறிந்து திரைஅரங்கிற்கு வெளியே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தராம். அதைப் பார்த்த கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்த தகவலை கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

    English summary
    Hey Ram Villan Nawazuddin Siddiqui Scenes Deleted
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X