ஹே சினாமிகா இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் அப்டேட் வெளியானது!

சென்னை : மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் துல்கர் சல்மான் தமிழிலும் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்

இதுவரை நடன இயக்குனராக பலருக்கும் தெரிந்த பிருந்தா மாஸ்டர் இப்பொழுது ஹே சினாமிகா என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகிறார்
முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ஹே சினாமிகா இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார் மலையாளத்தில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை கொடுத்து வரும் துல்கர் சல்மான் தமிழிலும் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி உள்ளிட்ட திரைப்படங்கள் துல்கர் சல்மானுக்கு மேலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கித் தந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மாபெரும் வெற்றி பெற்றது. புதுமையான கதைக்களம் விறுவிறுப்பான திரைக்கதை என வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இப்போது ஹே சினாமிகா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இரண்டு முன்னணி ஹீரோயின்கள்

இரண்டு முன்னணி ஹீரோயின்கள்

முக்கோண காதல் கதையாக உருவாகி வரும் இந்த படத்தை பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கி வருகிறார் இதுவரை நடன இயக்குனராக மட்டும் அனைவருக்கும் பரிச்சயமாக இருந்த பிருந்தா மாஸ்டர் ஹே சினாமிகா படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் படத்தில் இரண்டு கதாநாயகிகள் அதன்படி காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் என இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.

இரண்டாவது சிங்கிள்

இரண்டாவது சிங்கிள்

ஜியோ ஸ்டூடியோ தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மொத்தமும் முடிந்து இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் சில தினங்களுக்கு முன்பு முதல் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் இரண்டாவது சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

தோழி

தோழி

ஹே சினாமிகா படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் "தோழி " வரும் ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சிங்கிள் தோழி அறிவிப்புடன் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் நடுரோட்டில் மழையில் நனைந்தவாறு நடந்துவரும் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X