பிருந்தா மாஸ்டரின் ஹேய் சினாமிகா படப்பிடிப்பு ஓவர்.. விரைவில் திரையில் !

சென்னை : நடன இயக்குனராக பல வருடங்களாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் பிருந்தா மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படம் கடந்த மார்ச் மாதமே படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கொரானா காரணமாக தள்ளி போய் இப்பொழுது முடிவடைந்துள்ளது.

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் ரொமான்டிக் காதல் திரைப்படமாக உருவாகி வரும் ஹேய் சினாமிகா திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனராக

இயக்குனராக

இந்தியாவில் உள்ள பல முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இன்றுவரை வெற்றிகரமாக இருக்கும் பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அவதாரம் எடுத்து துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் "ஹேய் சினாமிகா" திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஓகே கண்மணி

ஓகே கண்மணி

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் என இரண்டு கதாநாயகிகள் இதில் நடித்து வர ரொமான்டிக் காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் டைட்டில் ஓகே கண்மணி திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் இருந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஓகே கண்மணி திரைப்படத்திலும் துல்கர் சல்மான் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிகரமாக முடிவடைந்து

வெற்றிகரமாக முடிவடைந்து

மேலும் இந்த திரைப்படத்தில் சுகாசினி மணிரத்தினம், கே பாக்யராஜ் மற்றும் குஷ்பு ஆகிய பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்க பல மாதங்களாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த ஹேய் சினாமிகா படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

வரிசைகட்டி ரிலீஸாக

வரிசைகட்டி ரிலீஸாக

இந்நிலையில் ஹேய் சனாமிகா படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் காஜல் அகர்வால் இந்தியன் 2 -விலும் நடித்து வர இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிப்பில் மிரட்டி வருகிறார், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார், மேலும் சிரஞ்சீவியின் ஆச்சாரியா, பாரிஸ் பாரிஸ் ஆகிய திரைப்படங்கள் காஜல் அகர்வாலுக்கு வரிசைகட்டி ரிலீஸாக காத்துக்கொண்டு இருக்கிறது.

படபிடிப்பு தள புகைப்படங்களை

படபிடிப்பு தள புகைப்படங்களை

இவ்வாறு காஜல் அகர்வாலுக்கு அடுத்தடுத்த பெரிய திரைப்படங்கள் இருக்க ஹேய் சனாமிகா மிக திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்த மகிழ்ச்சியான செய்தியை ஜியோ ஸ்டுடியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் படபிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X