கிராமத்து அண்ணாத்த கொல்கத்தாவில் பழிவாங்க கிளம்புறாரா? மோஷன் போஸ்டரில் இவ்வளவு விஷயம் இருக்கா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அனல் பறக்கும் அண்ணாத்த மோஷன் போஸ்டர் ரஜினியின் வாய்ஸ் ஓவருடன் வெளியாகி உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை அண்ணாத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றது.

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மோஷன் போஸ்டரில் படத்தின் மொத்த கதையுமே இருப்பதாக நெட்டிசன்கள் ஒவ்வொரு இன்ச்சாக நோட் பண்ணி வருகின்றனர்.

அண்ணாத்த மோஷன் போஸ்டர்

அண்ணாத்த மோஷன் போஸ்டர்

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து வெறித்தனமான மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

டீசர் மாதிரி இருக்கே

டீசர் மாதிரி இருக்கே

அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்தின் மிரட்டலான குரலை கேட்ட உடனே இது மோஷன் போஸ்டரா? இல்லை அண்ணாத்த டீசரா? என்றே தெரியாத அளவுக்கு மிரட்டலாக இருக்கு என்றும் இந்த தீபாவளி கன்ஃபார்ம் தலைவர் தீபாவளி தான் என்றும் கெத்தாக காலரை தூக்கி விட்டுள்ளனர்.

இதுதான் கதையா

இதுதான் கதையா

காலையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் கிராமத்தில் ஜாலியாக வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டியில் போஸ் கொடுத்த ரஜினி மாலையில் புல்லட் பைக்கில் கையில் அருவாளுடன் ஒரு காரையே நொறுக்கி தள்ளும் காட்சி இடம்பெற்றதும் கிராமத்து அண்ணாத்த கொல்கத்தாவில் பழிவாங்கும் கதை தான் படமா? என்றே ரசிகர்கள் கதை குறித்த விவாதங்களை கிளப்பி உள்ளனர்.

கொல்கத்தா காளி

கொல்கத்தா காளி

ரஜினிகாந்தை காட்டும் அந்த பாலம் கொல்கத்தா ஹவுரா பிரிட்ஜ் என்றும் புல்லட்டில் WB என மேற்கு வங்க நம்பர் பிளேட் இருப்பதாகவும், கொல்கத்தா காளி போல வில்லனை வேட்டையாட அண்ணாத்த கிளம்பிவிட்டார் என்று ரசிகர்கள் அண்ணாத்த படத்தின் கதையை கெஸ் செய்து வருகின்றனர்.

விஸ்வாசம் படத்தை போல

விஸ்வாசம் படத்தை போல

தல அஜித்தை வைத்து இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தை போலவே அண்ணாத்த கதையும் இருக்குமா? என்கிற சந்தேகமும் இந்த மோஷன் போஸ்டரை பார்த்த பின்னர் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. விஸ்வாசம் படத்தை போலவே விறுவிறுப்புடன் படம் ஸ்க்ரீன்களை தெறிக்கவிடும் என்பதில் சந்தேகமே இல்லை என ரஜினி ரசிகர்கள் கமெண்ட்டுகளை அடித்து நொறுக்கி வருகின்றனர்.

பழிவாங்கும் அண்ணாத்த

பழிவாங்கும் அண்ணாத்த

சந்தோஷமாக இருந்த தனது பெரிய குடும்பத்தை அழித்த அல்லது அழிக்க நினைக்கும் வில்லனை விரட்டி பிடித்து வேட்டையாடும் பழிவாங்கும் கதை தான் அண்ணாத்த என ஏகப்பட்ட கோணத்தில் மோஷன் போஸ்ட்ரை பார்த்தே ரசிகர்கள் கதையை கூறி வரும் நிலையில், டீசர் வந்தால் இன்னமும் கதை பற்றிய முழு தெளிவும் வந்து விடும் என்றும் கூறுகின்றனர்.

வலிமை மோஷன் போஸ்டரை விட

வலிமை மோஷன் போஸ்டரை விட

தல அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டரை விட ரஜினிகாந்தின் அண்ணாத்த மோஷன் போஸ்டர் மிரட்டலாக இருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இப்பவே சண்டையை ஆரம்பித்து விட்டனர். மேலும், கண்டிப்பாக வலிமை படம் இந்த தீபாவளிக்கு வருவது சந்தேகம் தான் என்றும் அஜித் ரசிகர்களிடம் வம்பிழுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X