Kanguva action scene: 80 ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதிய சூர்யா.. எங்க தெரியுமா!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டு இடைவிடாது சூட்டிங் நடத்தி வருகிறது.

கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் தற்போது தாய்லாந்தில் நடத்தப்பட்டு வருகிறது.
80 ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதிய சூர்யா: நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் சிவா இயக்கத்தில் வரலாற்று கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகி வருகிறது கங்குவா படம். கமர்ஷியல் இயக்குநராக நடைபோட்டு வந்த இயக்குநர் சிவா, இந்தப் படத்தின்மூலம் தன்னை சிறப்பான வகையில் வெளிப்படுத்தவுள்ளார். அவரது இந்த அதிரடி மாற்றத்தை பார்க்க ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இருவேறு கெட்டப்புகளில் சூர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
தாய்லாந்தில் சூட்டிங்: கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி, கோவா போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது தாய்லாந்தில் சூட்டிங் நடந்து வருகிறது. இங்கு வரலாற்று பின்புலத்திலான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது சூர்யாவின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 80 ஸ்டண்ட் கலைஞர்களுடன் சூர்யா மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இறுதிக்கட்ட சூட்டிங்: படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடந்துவரும் நிலையில், இந்த மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் சில பேட்ச் வொர்க்குகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளையும் துரிதப்படுத்த இயக்குநர் சிவா திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து படத்தின் சிஜி வேலைகளையும் தொடர திட்டமிட்டுள்ளார்.
கோடை கொண்டாட்ட ரிலீஸ்: படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். 7ம் அறிவு போன்ற படங்களில் வரலாற்று காட்சிகளில் சூர்யா நடித்திருந்தாலும், கங்குவா படத்தில் அதிகமான காட்சிகளில் அவர் வரலாற்று பின்புலத்தில் நடித்துள்ளார். அவரது லுக் உள்ளிட்டவை மிகவும் பிரம்மாண்டமான அளவில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சூர்யா 43 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 43 படத்திற்காக அடுத்தமாதம் சூட்டிங்கில் இணையவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தை அவரே தயாரிக்கவுள்ளார். முன்னதாக சூரரைப் போற்று படத்தில் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணி இணைந்து பணியாற்றி மிகப்பெரிய வெற்றியை ரசிகர்களுக்கு கொடுத்தது. மேலும் பல தேசிய விருதுகளையும் அள்ளியது. இந்நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணையவுள்ளது அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











