தடைகளை உடைத்து வெளியாகிறது நாடோடிகள் 2… இன்று இரவு முதல் ரிலீசாகும் என சமுத்திரகனி ட்வீட்!

By Staff

சென்னை: நாடோடிகள் 2 திரைப்படம் இன்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படும் என இயக்குநர் சமுத்திரகனி அறிவித்துள்ளார்.

நடோடிகள் 2 திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை தள்ளுபடி செய்துள்ளது.

High Court interim ban lifted, Nadodigal 2 hit the screens from tonight!

நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் -2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி எப்.எம். பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார், பட தயாரிப்பு செலவுகளுக்காக தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாக 5 கோடியே 25 லட்சம் ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. பல தவணைகளாக, 3 கோடியே 50 லட்சம் பணம் தயாரிப்பாளர்க்கு வழங்கிய நிலையில்

வேறு நிறுவனம் மூலமாக படத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்

வெளியிட தயாரிப்பாளர் நந்தகுமார் நடவடிக்கைகள் எடுத்து வருவதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட முயற்சிப்பது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு அவர் மழுப்பலான பதில் அளித்ததாகவும், ஒப்பந்தபடி மீதமுள்ள 1 கோடியே 75 லட்சம் ரூபாயை அளிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்க வேண்டும் அதுவரை படத்தை வெளியிடுவதற்கான "கீ டெலிவரி மெசேஜ்" திரையரங்குகளுக்கு தர "கியூப்" க்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக "கீ டெலிவரி மெசேஜ்" தர கியூப் நிறுவனத்திக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பதில் அளிக்க பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டு விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இன்று முதல் நாடோடிகள் 2 படம் திரைக்கு வரும் என சமுத்திரகனி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ட்வீட் போட்டுள்ளார்.

Recommended Video

மேடையில் கண்கலங்கிய சமுத்திரக்கனி | Nadodigal 2 Audio launch | Samuthirakani Speech

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X