நடிகை பாலியல் வழக்கு.. நிரபராதி என வெளியான நடிகர் திலீப் குமாருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னை: நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் எர்ணாகுளம் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் முதல் 6 பேரும் குற்றவாளி என்றும், நடிகர் திலீப் குமார், சார்லி தாமஸ், சுனில் குமார், சரத் நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளார். இதை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், 4 பேருக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மலையாளத் திரையுலகின் உச்ச நட்சத்திரமான திலீப் மற்றும் முன்னணி நடிகை மஞ்சு வாரியர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பின், காவ்யா மாதவன் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவதாக திலீப்பை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி, கேரளாவையே உலுக்கிய ஒரு கொடூரச் சம்வம் நடந்தது. நடிகை காரில் சென்றுகொண்டிருந்தபோது நடிகையை கடத்திய கும்பல் அவரை பாலியல் துன்புறுத்தலுக்குஆளாக்கியதோடு, அந்தக் காட்சிகளை மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்தனர்.

நடிகர் திலீப் குமார்: இதுகுறித்து, அந்த நடிகை, அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை, கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலின் பின்னணியில் இருப்பது நடிகர் திலீப் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகர் திலீப் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். நான்கு மாதங்களுக்குப்பின் ஜாமீனில் வெளியே வந்தார். ஏறத்தாழ 8 ஆண்டுகள் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் மாதம் எர்ணாகுளம், நடிகர் திலீப் மீதான குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி திலீப்பை விடுதலை செய்தது. அதே நேரம், பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
மேல்முறையீட்டு மனு: இந்நிலையில் நடிகை பாலியல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரளா அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் நடிகர் திலீப்குமார் உட்பட நான்கு பேர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க வேண்டும், இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை முறையாக நடத்தவில்லை, குற்றத்தை நிரூபிக்க பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டும் அவற்றை விசாரணை ஆணையம் உரிய முறையில் பரிசீலனை செய்யவில்லை என விசாரணை நீதிமன்றம் அளித்த எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நடிகர் திலீப் குமார் உட்பட நான்கு பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











