மனுஷி படத்தில் 37 சர்ச்சைக்குரிய காட்சிகள்.. படத்தை பார்க்க நீதிபதி முடிவு!

சென்னை: வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், 'அறம்' படத்தின் மூலம் புகழ்பெற்ற கோபி நைனார் இயக்கத்தில் உருவான 'மனுஷி' திரைப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனார். இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அத்திரைப்படத்தை நேரடியாக பார்க்க இருப்பதாக உத்தரவிட்டுள்ளது.

ஆண்ட்ரியா நடித்த மனுஷி படத்தில், தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுக்கு காவல் நிலையததில் ஏற்படும் சித்ரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இப்படம், கடந்த ஆண்டு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. அப்போது, தணிக்கை குழு, படத்தில், அரசை எதிர்மறையாக விமர்சிக்கும் விதமாகவும், இடதுசாரி கம்யூனிசத்திற்கும், Mainstream Communism இடையே உள்ள வேறுபாடுகளைக் குழப்புவதாக கூறி சென்சார் போர்டு படத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தது.

Manushi vetrimaaran Andrea
Photo Credit:

மனுஷி திரைப்படம்: இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் ஜூன் மாதம் ஒரு ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மனுஷி படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்த காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது என்றும், மத்திய தணிக்கை குழு வாரியம் வெளிப்படைத்தன்மையற்ற முறையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி இருந்தார். அந்த மனு ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டு, தயாரிப்பாளர் சட்டப்படி மேலும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

படத்தை பார்க்க வேண்டும்: இந்த வழக்கு இன்று மீண்டும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, விதிகளுக்கு முரணாக தணிக்கை குழு இந்த ஆட்சேபங்களை தெரிவித்துள்ளதாகவும், 37 காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க கூறியுள்ளதாகவும் வெற்றிமாறன் தரப்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி இதற்கு மாற்று நிவாரணம் ஏதாவது உள்ளதா என கேள்வி எழுப்பியதற்கு, உயர் நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என சென்சார் போர்டு சுட்டிக்காட்டிய காட்சிகள் மற்றும் வசனங்கள் சரியானவையா என ஆய்வு செய்ய படத்தை பார்க்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆகஸ்ட் 24ந் தேதி இசைக் கல்லூரியில் உள்ள திரையரங்கில் 'மனுஷி' படத்தை பார்வையிட ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த நாளில், தணிக்கை குழு உறுப்பினர்களும், பட தயாரிப்பாளருமான வெற்றிமாறன் உடன் இருக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X