ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக் வீடியோவை பார்த்து ஷாக்கான நீதிபதிகள்.. என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை: ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் குண்டர் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டனர்.

டிக்டாக்கில் ஆபாசமாக வீடியோக்களை வெளியிட்டு ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி உள்ளார் ரவுடி பேபி சூர்யா.

யூடியூபர் ஒருவரை ஆபாசமாக பேசிய நிலையில், ரவுடி பேபி சூர்யா மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

ரவுடி பேபி சூர்யா

ரவுடி பேபி சூர்யா

ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. சுப்புலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதனால் பல சிக்கல்களையும் ரவுடி பேபி சூர்யா சந்தித்தார்.

ஆபாச பேச்சு

ஆபாச பேச்சு

இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கைது செய்தனர்.

குண்டர் தடுப்பு சட்டம்

குண்டர் தடுப்பு சட்டம்

பின்னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. காழ்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும், தனது கோரிக்கையை அறிவுரைக்கழகம் உரிய முறையில் பரீசிலிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

நீதிபதிகள் அதிர்ச்சி

நீதிபதிகள் அதிர்ச்சி

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காரமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், இந்த வழக்கை சீராய்ந்து பார்க்கும்போது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியுள்ளதாகவும், அவர் பேசிய வீடியோக்களை நீதிபதிகள் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். லேப்டாப் மூலம் நீதிபதிகளிடம் டிக் டாக் காட்சிகளை காண்பித்தார். ஒரு சில காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து வழக்கை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X