twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜ ராஜ சோழன் குறித்து விமர்சனம்.. கைவிரித்தது ஹைகோர்ட்! இயக்குநர் பா.ரஞ்சித் எந்நேரத்திலும் கைது?

    |

    Recommended Video

    முன்ஜாமீன் வழக்கில் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி

    சென்னை: ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்த வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீட்டிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இயக்குநர் பா.ரஞ்சித் அட்டகத்தி படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து மெட்ராஸ் படம் மூலம் வெற்றி இயக்குநராக முத்திரை பதித்தார் ரஞ்சித்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பெரும் பிரபலமானார் பா.ரஞ்சித். இதைத்தொடர்ந்து அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களை கூறி பிரச்சனையிலும் சிக்கி வருகிறார் ரஞ்சித்.

    தரக்குறைவாக விமர்சனம்

    தரக்குறைவாக விமர்சனம்

    கடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஞ்சித், சோழ மன்னர் ராஜ ராஜ சோழனை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.

    ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

    ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

    முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட அமைப்புகள் பா ரஞ்சித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து ரஞ்சித் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பபட்டன.

    கைது செய்ய தடைவிதித்தது

    கைது செய்ய தடைவிதித்தது

    இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சிய ரஞ்சித், முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரஞ்சித்தை சரமாரியாக விளாசியதோடு கைது செய்யவும் தடை விதித்தது.

    மறுப்பு தெரிவித்த ஹைகோர்ட்

    மறுப்பு தெரிவித்த ஹைகோர்ட்

    இதுவரை இரண்டு முறை பா.ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீட்டிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

    கைது செய்யப்படுவாரா ரஞ்சித்?

    கைது செய்யப்படுவாரா ரஞ்சித்?

    இயக்குநர் ரஞ்சித் வழக்கில் தம்மையும் ஒரு தரப்பாக சேர்க்க வழக்கறிஞர் ரஜினி கோரியதால் வழக்கு விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரஞ்சித்துக்கு எதிரான வழக்கில் கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க நீதிமன்றம் மறுத்து விட்டதால் ரஞ்சித் உடனடியாக கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Chennai High court Madurai bench has refused to extend the ban against arrest of Director Pa Ranjith.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X