பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு எல்லையில்லையா? இயக்குநர் பா ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட்!

Recommended Video

ஏமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அக்கறையுடன் சொன்ன குறிப்புகள்- வீடியோ

மதுரை: ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை இயக்குநர் பா ரஞ்சித்தை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளது.

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து கடந்த 5 ஆம் தேதி திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மிகவும் தரக்குறைவாக பேசினார். தலித் நிலங்களை பிடுங்கியவர் ராஜ ராஜ சோழன் என்றும் தேவதாசி முறையை கையாண்டவர் ராஜ ராஜ சோழன் என்றும் அவர் கூறினார்.

அவரது பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.இதுதொடர்பாக ரஞ்சித் மீது பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளரே முன்வந்து ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்தார்.

கைவிரித்த ஹைகோர்ட்

கைவிரித்த ஹைகோர்ட்

இதில் முன்ஜாமீன் கோரி இயக்குநர் ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் இரண்டு முறை ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம் மூன்றாவது முறை கைவிரித்துவிட்டது.

ரஞ்சித் புதிய மனு

ரஞ்சித் புதிய மனு

இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரஞ்சித் தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ரத்துசெய்ய கோரிக்கை

ரத்துசெய்ய கோரிக்கை

தன் மீதான வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் சாதி பிளவை ஏற்படுத்தும் வகையில் தான் பேசவில்லை, நில உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் பேசியதாகவும் எனவே தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் ரஞ்சித் தரப்பில் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நீதிபதி மறுப்பு

நீதிபதி மறுப்பு

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சித்தின் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டார்.

ஆதாரம் எங்குள்ளது?

ஆதாரம் எங்குள்ளது?

ராஜ ராஜ சோழன் தலித் நிலங்களை பறித்தார் என்று எந்த நோக்கத்தில் கூறப்பட்டது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். ராஜ ராஜ சோழன் தலித் மக்களின் நிலத்தை பறித்தார் என்பதுதற்கு ஆதாரம் எங்குள்ளது என்றும் நீதிபதி வினா எழுப்பினார்.

ஒரு வரம்பு இல்லையா?

ஒரு வரம்பு இல்லையா?

பயிர் செய்வோர் நிலத்தை சொந்தமாக வைத்திருக்கலாம், பயிர் செய்யாதோர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றுதான் நூலில் உள்ளது என்றும் நீதிபதி பாரதிதாசன் கூறினார். மேலும் ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

காவல்துறைக்கு உத்தரவு

காவல்துறைக்கு உத்தரவு

இதைத்தொடர்ந்து ரஞ்சித்தின் உரை முழுவதையும் உயர்நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கு நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 8 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X