twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தி லெஜண்ட் படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

    |

    சென்னை: லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்து, நாளை திரைக்கு வரகிறது "தி லெஜண்ட்" திரைப்படம்.

    Recommended Video

    “Legend” சரவணா யார்?

    இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் பிசினஸை தாண்டி முதல் முறையாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

    சுதா கொங்கராவின் அடுத்த ஹீரோ சூர்யாவா? சிம்புவா? அஜித்தா?...அவரிடமே கேட்போம் சுதா கொங்கராவின் அடுத்த ஹீரோ சூர்யாவா? சிம்புவா? அஜித்தா?...அவரிடமே கேட்போம்

    தி லெஜண்ட் நாளை ரிலீஸ்

    தி லெஜண்ட் நாளை ரிலீஸ்

    இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணா மற்றும் ஊர்வசி ரவுத்தேலா நடிப்பில் உருவாகி உள்ள தி லெஜண்ட் திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக 2500 திரையரங்குகளில் பான் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது. கடந்த சில வாரங்களாக, ரிலீஸ் ஆவதற்கு முன்பே படங்களை வெளியிட்டதை போல இந்த வாரம் எந்த ப்ரீமியர் ஷோவும் போடாமல், நாளை காலை டைரக்ட்டாக படத்தை வெளியிட உள்ளனர்.

    விவேக்கின் கடைசி படம்

    விவேக்கின் கடைசி படம்

    தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அதன் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், அவருடன் ஊர்வசி ரவுத்தேலா, கீத்திகா, பிரபு, விஜயகுமார், யோகி பாபு, விவேக், கோவை சரளா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள "தி லெஜண்ட்" திரைப்படம் உலகெங்கிலும் நாளை திரைக்கு வரவுள்ளது. மறைந்த நடிகர் விவேக்கின் கடைசி படமாக இது கருதப்படுகிறது.

    இணையதளங்களில் வெளியிட தடை

    இணையதளங்களில் வெளியிட தடை

    இந்த படத்தை அரசு மற்றும் தனியார் இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நஷ்டம் ஏற்படும்

    நஷ்டம் ஏற்படும்

    இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மிகுந்த பொருட் செலவில் படத்தை உருவாக்கி உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று வாதிட்டார்.

    உயர்நீதிமன்றம் உத்தரவு

    உயர்நீதிமன்றம் உத்தரவு

    இதையடுத்து, தி லெஜண்ட் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட 1,262 இணையதளங்களுக்கும், இணைய தள சேவை வழங்கும் 29 நிறுவனங்களுக்கும் படத்தை வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    High Court orders piracy websites will never release The Legend movie. Legend Saravana and Urvashi Rautela starrer movie will hit the screens from July 28th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X