twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷாலின் மனுவை நிராகரிக்கக் கோரிய விவகாரம்... ஐசரி கணேசனுக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

    |

    சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் தொடர்பான வழக்கில் ஐசரி கணேசிற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் விஷால் கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி அனந்த் வெங்கடேஷ் எடுத்துக் கொண்டார்.

    High court sentenced Rs.10 lakhs penalty for Isari Ganesh

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாமென ஐசரி கணேஷ் கோரினார். இதையடுத்து, ஐசரி கணேஷ் மற்றும் அவருடன் இருந்த அனந்தராமன் ஆகி இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல்குமார் அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜரான ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமன் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். தாமாக முன்வந்து சட்டப்பணிகள் ஆணையத்துக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக ஐசரி கணேஷ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஐசரி கணேசுக்கு மன்னிப்பு வழங்கிய நீதிபதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக மாநில சட்டப்பணிகள் ஆணைய குழு மூலமாக ரூ.10 லட்சம் பணத்தை 2 வாரங்களில் செலுத்த உத்தரவிட்டனர். இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    Read more about: isari ganesh high court
    English summary
    The Madras high court today sentenced Rs.10 lakhs penalty for film producer, actor and educationalist Isari Ganesh in the sumoto defamtion case
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X