twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரச்சனையா? புரமோஷனா? சூர்யாவின் சூரரைப் போற்று பாடலுக்கு எதிரான புகார்.. உயர்நீதிமன்றம் அதிரடி!

    |

    சென்னை: சூரரைப் போற்று திரைப்பட பாடலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

    சமீபத்தில் நீட் தொடர்பாக சூர்யா வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து பல தரப்பில் இருந்தும் அவருக்கு நெருக்கடி கிளம்பி வருகிறது.

    பிக்பாஸ் பிளாஷ்பேக்: முதல் சீசனில் அதிகம் கழுவி ஊற்றப்பட்ட பிரபலங்கள்.. ஒரு குட்டி ரவுண்ட் அப்! பிக்பாஸ் பிளாஷ்பேக்: முதல் சீசனில் அதிகம் கழுவி ஊற்றப்பட்ட பிரபலங்கள்.. ஒரு குட்டி ரவுண்ட் அப்!

    என்ன பாடல்?

    என்ன பாடல்?

    சூர்யாவின் சூரரைப் போற்று பாடல்கள் எல்லாம் வெளியாகி கிட்டத்தட்ட பல மாதங்கள் ஆகின்றன. வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் சூரரைப் போற்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில், சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள "மண் உருண்ட மேல மனுஷன் பைய ஆட்டம் பாரு" பாடலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    என்ன பிரச்சனை?

    என்ன பிரச்சனை?

    சூரரைப் போற்று படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடலாசிரியர் ஏகாதசி வரிகளில் செந்தில் கணேஷ் குரலில் வெளியான மண் உருண்ட பாடலில் சாதி பிரச்சனையை தூண்டும் வரிகள் இடம்பெற்று உள்ளதாக தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    உயர்நீதிமன்றம் அதிரடி

    உயர்நீதிமன்றம் அதிரடி

    சூர்யாவின் சூரரைப் போற்று பாடலுக்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் சூரரைப் போற்று பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அந்த பாடல் நீக்கப்படுமா? அல்லது குறிப்பிட்ட சில வரிகள் மியூட் செய்யப்படுமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

    2022 வரை ரிலீஸ் பண்ணக் கூடாது

    2022 வரை ரிலீஸ் பண்ணக் கூடாது

    மேலும், கார்த்திக் தொடர்ந்த வழக்கில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை வரும் 2022 வரை ரிலீஸ் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளார். இதனால், சூர்யாவின் ரசிகர்கள் மிகவும் அப்செட் ஆகி உள்ளனர். மேலும், நடிகர் சூர்யா கார்னர் செய்யப்படுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

    Recommended Video

    சூர்யாவை அரசியலுக்கு அழைக்கிறாரா மூடர்கூடம் நவீன்?
    புரொமோஷனா?

    புரொமோஷனா?

    பொதுவாக தளபதி விஜய்யின் படங்கள் ரிலீசுக்கு முன்பு இதுபோன்ற நீதிமன்ற பிரச்சனைகளையும், அரசியல் எதிர்ப்புகளையும் சந்திக்கும். அதுவே அந்த படத்திற்கு புரொமோஷனாக அமைந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரும். இப்போ நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு கிளம்பி உள்ள இந்த பிரச்சனைகள் அந்த படத்திற்கு புரொமோஷனாகவே மாறும் என்றும் ரசிகர்கள் இதனை நல்ல விஷயம் என வரவேற்று வருகின்றனர்.

    English summary
    High Court orders Police department to take needed action on Suriya’s Soorarai Pottru controversial song after a complaint raise against on it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X