Jana Nayagan: ஜனநாயகன் தீர்ப்பு எப்போ தெரியுமா?.. தணிக்கை வாரியத்துடனான மோதல் முடிவுக்கு வருமா?
சென்னை: நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 27 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்குகிறது.
தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. தணிக்கை வாரிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ஜனவரி 5 அன்று மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பிய முடிவு நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டது; ஆனால், ஜனவரி 6 அன்று நிறுவனம் தணிக்கைச் சான்றிதழ் கோரி மனு தாக்கல் செய்தது. பதில் மனு அவகாசம் மறுக்கப்பட்டும், மறுஆய்வு உத்தரவை நிறுவனம் எதிர்க்காத நிலையிலும் தனி நீதிபதி வாரிய முடிவை ரத்து செய்தார் என வாதிடப்பட்டது.

முதலில், 14 காட்சிகளை நீக்க CBFC பரிந்துரைத்தது. இது இடைக்கால முடிவு; பின்னரே மறுமதிப்பீடு செய்யப்பட இருந்தது. இருப்பினும், புகாரின் அடிப்படையில், படத்தை மறுஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரைக்க வாரியம் முடிவெடுத்தது.
திரைப்படங்களைப் பார்த்து பரிந்துரைகள் வழங்கவே மறுஆய்வுக் குழு வாரியத்திற்கு உதவுகிறது. ஆனால், இறுதி சான்றிதழ் முடிவு தணிக்கை வாரியத்திடமே உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஜனவரி 9 ஆம் தேதி படம் வெளியாக இருந்ததால் அவசர விசாரணை கோரப்பட்டதாகக் குறிப்பிட்டார். வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்படாததால் ஓடிடி தளம் நடவடிக்கைகளை எடுக்கும் என தயாரிப்பு நிறுவனம் அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
விசாரணையின் போது, அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் ஒரே நாளில் முடித்து உத்தரவு பிறப்பிப்பது வழக்கமல்ல என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். சினிமா வணிகம் என்பதால், தணிக்கைச் சான்றிதழுக்கு முன்பே தயாரிப்பாளர்கள் எப்படி வெளியீட்டுத் தேதியை அறிவிக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர், திரைப்படம் ஏற்கனவே 22 நாடுகளில் ஒப்புதல் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். பாலிவுட்டிலும் சான்றிதழுக்கு முன்பே திரைப்படங்களின் வெளியீடு அறிவிக்கப்படுவதால், தணிக்கைக்காக காத்திருப்பது வழக்கில்லை என்றார்.
அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, நீதிபதிகள் அமர்வு தங்கள் தீர்ப்பை ஒத்திவைத்தது. தேதி குறிப்பிடப்படாத அத்தீர்ப்பு ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வால் வழங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











