ஆங்கராக நடக்கும் போட்டி.. காரணம் இதுதான்.. விஜய் டிவி ஆங்கர்களுக்கு எவ்வளவு சம்பளம்னு பாருங்க!
சென்னை: விஜய் டிவியின் ஆங்கர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைதான் கடந்த சில தினங்களாக அனைவருக்குமான பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமில்லாமல் விஷயம் குறித்து கேள்விப்பட்டவர்கள் கூட தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி விவகாரத்தில் பெரும்பாலும் பிரியங்கா மீது தான் தவறு என்பது போல அடுத்தடுத்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது குறித்து அவருக்கு ஆதரவு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தன்னை ஆங்கர் வேலையில் சிறப்பாக செயல்பட பிரியங்கா அனுமதிக்கவில்லை என்பதே மணிமேகலையின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

விஜய் டிவி ஆங்கர்கள்: ஆங்கர் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கோமாளியாக ஏராளமான ரசிகர்களை கடந்த நான்கு சீசன்களாக கவர்ந்தவர். கடந்த சீசனிலேயே சுனிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து இடையிலேயே வெளியேறினார். இந்நிலையில் சில வாரங்கள் கழித்து இவர் மீண்டும் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இணைந்திருந்தார். ஆனால் இந்த சீசனில் அவர் கோமாளியாக இல்லாமல் ஆங்கராக மாறியிருந்தார். கடந்த சீசனிலேயே நிகழ்ச்சியில் அவ்வப்போது ஆங்கராக சென்று அவர் பேசிய நிலையில் அவரது ஆர்வம் அப்போதே வெளிப்பட்டது.
ஆங்கரான மணிமேகலை: இந்நிலையில் இந்த சீசனில் அவருக்கு ஆங்கராகும் வாய்ப்பு கிடைத்தது. தான் மிகச்சிறந்த ஆங்கராக விஜய் டிவியில் வரவேண்டும் என்ற விருப்பம் மணிமேகலைக்கு இருந்த நிலையில் அவருக்கு கிடைத்த ஒரே வாய்ப்பிலும் பிரியங்காவின் தலையீடு இருந்ததை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் நீண்ட காலங்களாக இருந்த இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் வெடித்த சூழலில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவை மணிமேகலை எடுத்துள்ளார். ஆங்கராக அவர் ஏன் இவ்வளவு ஆர்வம் அவர் காட்ட வேண்டும் கோமாளியாக சிறப்பாக தானே செயல்பட்டு வந்தார் என்று பலருக்கும் கேள்வி இருந்தது.
கோபிநாத் சம்பளம்: இந்த கேள்விகளுக்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. விஜய் டிவியில் மட்டுமில்லாமல் மற்ற சேனல்களிலும் ஆங்கர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பும் அதிகமான சம்பளமும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் முன்னணி ஆங்கராக பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நீயா நானா கோபிநாத்திற்கு ஒரு எபிசோடுக்கு 5 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலமாக அவர் செயல்பட்டு வரும் நிலையில் சேனலில் அதிகமான சம்பளம் வாங்குபவராக அவர் இருந்து வருகிறார். இதனிடையே அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.
பிரியங்கா சம்பளம் இவ்வளவா?: இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கராக கடந்த ஐந்து சீசங்களாக செயல்பட்டு வரும் ரக்ஷனுக்கு ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியின் ஆங்கராக இணைந்திருந்த மணிமேகலைக்கு ஒரு எபிசோடுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் டிவியின் முன்னணி பெண் ஆங்கராக பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிரியங்காவிற்கும் ஒரு எபிசோடிற்கு இரண்டரை லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிமேகலையின் மனஉளைச்சல்: இந்நிலையில் விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கராக செயல்பட்டு வரும் மாகாபா ஆனந்துக்கும் ஒரு எபிசோடிற்கு இரண்டரை லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோமாளியாக இருந்தபோதிலும் கடந்த சீசனிலேயே ஆன்சராக மாறும் ஆசையை மணிமேகலை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார் என்ற நிலையில் அவரது இந்த விருப்பத்திற்கான காரணம் தற்போது வெளிப்பட்டுள்ளது. மேலும் தான் எப்படியாவது விஜய் டிவியின் முன்னணி ஆங்கராக மாறிவிட வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் முட்டுக்கட்டை போட்டதே அவருக்கு மிகப்பெரிய அளவில் மன உளைச்சலை கொடுத்து அதுவே அவர்களுக்குள் சண்டையையும் மூட்டி விட்டதாக தெரிகிறது.
ஆத்திரத்திற்கு காரணம்: ஒரு எபிசோடுக்கு ஒரு நாள் முழுவதும் ஷூட்டிங் நடக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் சூழல் விஜய் டிவியில் உள்ளது. இத்தகைய சம்பளத்திற்காக தன்னை ஆங்கராக நிரூபிக்க வேண்டும் மற்றும் இருப்பதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆங்கர்கள் நினைப்பது தவறு இல்லை என்றே தெரிகிறது அதற்கு முட்டுக்கட்டையாக யாராவது வரும்போது ஆத்திரப்படுவதும் இயல்புதான் என்று தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications











