பீஸ்ட் ஃபார்முலாவில் லியோ.. ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியான வீடியோ

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் லியோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரே லோகேஷ் - விஜய் இணைந்திருக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.

லியோ ப்ளடி ஸ்வீட்

லியோ ப்ளடி ஸ்வீட்

லோகேஷ் கனகராஜும், விஜய்யும் மீண்டும் இணைந்திருக்கும் படத்துக்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது.அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அக்டோபர் மாதம் படம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் மாஸ்டர் கூட்டணி சேர்ந்திருப்பதால் படம் அதிரிபுதிரி ஹிட்டடிக்கும் என்று காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

லியோவில் களமிறங்கியிருக்கும் நட்சத்திர பட்டாளம்

லியோவில் களமிறங்கியிருக்கும் நட்சத்திர பட்டாளம்

லியோ படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மாத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. காஷ்மீரில் நடந்துவரும் ஷூட்டிங்கில் மிஷ்கினுக்கான போர்ஷன் முடிந்துவிட்டதால் அவர் சென்னை திரும்பியிருக்கிறார். விஜய்யுடன் குட்டி பிரேக் எடுத்துக்கொண்டு தமிழ்நாடு வந்திருக்கிறார். இருப்பினும் படக்குழுவில் மற்றவர்கள் காஷ்மீரில் ஷூட்டிங்கில் மும்முரமாக இருக்கின்றனர்.

லியோ படத்துக்கு பயன்படுத்தப்படும் கேமரா

லியோ படத்துக்கு பயன்படுத்தப்படும் கேமரா

இந்நிலையில் லியோ படத்துக்கு பயன்படுத்தப்படும் கேமரா குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி லியோ படத்தில் உயர்தர Red V Raptor XL வகை கேமரா பயன்படுத்தப்படுகிறது. இதனை லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் நிச்சயம் விஷுவல் ட்ரீட் காத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

பீஸ்ட் ஃபார்முலாவில் லியோ

பீஸ்ட் ஃபார்முலாவில் லியோ

முன்னதாக, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்திலும் இதே கேமராதான் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தப் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சமூக வலைதலங்களில் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது நினைவுகூரத்தக்கது. தற்போது இந்தப் படத்திலும் அதே கேமரா பயன்படுத்தப்பட்டாலும் பீஸ்ட் அளவு லியோ எந்த விமர்சனத்தையும் சந்திக்காது என விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X