சர்கார் படத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி... திட்டமிட்டப்படி ரிலீசாவதில் சிக்கல்!
சர்கார் திரைப்படத்தின் கதையும், செங்கோல் கதையும் ஒன்று தான் என தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: சர்கார் திரைப்படத்தின் கதையும், செங்கோல் கதையும் ஒன்று தான் என தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளதால் படத்திற்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தின் கதை தன்னுடைய செங்கோல் படத்தின் கதையை திருடி உருவாக்கப்பட்டுள்ளது என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து அச்சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், இரண்டு படங்களின் கதையையும் தீவிரமாக ஆய்வு செய்தார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸிடமும் விளக்கம் கேட்டார். அப்போது, நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஒருமுறை நேர்ந்த தேர்தல் அனுபவத்தை வைத்தே இப்படத்தை உருவாக்கியதாக முருகதாஸ் கூறினார்.
ஆனால் இதனை ஏற்க எழுத்தாளர் சங்கம் மறுத்துவிட்டது. செங்கோல் திரைப்படத்தின் கதையும், சர்கார் திரைப்படத்தின் கதையும் ஒன்று தான் எனக்கூறி வருண் ராஜேந்திரனுக்கு எழுத்தாளர் சங்கம் கடிதம் அளித்தது. இந்த கடிதத்தின் சில பக்கங்கள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவின.
அந்த கடிதத்தின் நகல் உண்மையானது தான் என இயக்குனர் கே.பாக்யராஜும் உறுதி செய்தார். ஏற்கனவே சர்கார் படத்திற்கு தடைகோரி வருண் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், எழுத்தாளர் சங்கத்தின் உறுதியான நடவடிக்கை, நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் சர்கார் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











