twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    க்ரைம் திரில்லர் படம் இயக்க மிஷ்கினுக்கு உயர் நீதிமன்றம் தடை... உதயநிதியின் சைக்கோவுக்கு சிக்கல்!

    க்ரைம் திரில்லர் படம் இயக்க மிஷ்கினுக்கு உயர் நீதிமன்றம் தடை.விதித்துள்ளது.

    |

    சென்னை: க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சினிமா பைனான்சியர் ரகுநந்தன் தன் மகன் ஷியாமை வைத்து க்ரைம் த்ரில்லர் படம் எடுக்க இயக்குனர் மிஷ்கினுடன் 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டார். இதற்காக, இயக்குனர் மிஷ்கினுக்கு 1 கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டது.

    Highcourt stays Mysskin movie

    ஒப்பந்தப்படி 2016 ஏப்ரலில் படம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அதே கதையை பயன்படுத்தி வேறு படம் எடுத்து வருவதாகவும், இதனால் இப்படத்திற்கு தடை விதிக்க கோரியும் பைனான்சியர் ரகுநந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுதாரரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில், வேறு திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

    English summary
    The Madras highcourt stays director Mysskin from making crime thriller movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X