பாலாவுக்கு கிடைத்த சூப்பர் பவர்.. ஷிவானியை சேவ் பண்ணி ஆஜீத்தை வெளியேற்றுவாரா? ட்விஸ்ட் இருக்கு!
சென்னை: குழப்பமான கோழிப் பண்ணை டாஸ்க்கில் அதிக கரன்சிகளை அள்ளிய பாலாவுக்கு சூப்பரான பவர் கிடைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் புதுசா எதையாவது கொண்டு வந்தால், அது மற்றவர்களை காப்பாற்றவோ அல்லது மற்றவர்களை காலி பண்ணவும் தான் இருக்கும்.
இந்நிலையில், பாலாவின் சூப்பர் பவர் என்ன செய்ய போகிறது என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

குழப்பிய கோழிப்பண்ணை
பிக் பாஸ் வரலாற்றிலேயே இதற்கு முன் இப்படியொரு குழப்பமான டாஸ்க் இருந்திருக்குமா? என்று தெரியவில்லை. பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒருபுறம் மண்டையை பிய்த்துக் கொண்டு விளையாடினால், அதை பார்க்கும் ரசிகர்களுக்கு அதற்கு மேல் மண்டை காய்ந்தது. நல்லவேளை சீக்கிரமா இதை முடிச்சீங்க என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் நன்றி எல்லாம் தெரிவித்து வருகின்றனர்.

முட்டையை உடைத்த பாலா
பொதுவாகவே லக்சரி டாஸ்க்குகளை சொதப்பும் பாலாஜி முருகதாஸ், இந்த முறையும் முட்டையை எல்லாம் உடைத்து, ஒரு சுற்று விளையாடாமல் இருந்தார். ஆனாலும், அவருடைய தந்திரமான வியாபார யுக்தியை விளையாட்டில் பயன்படுத்தியதால், இந்த முறை பாலாவின் கேம் பிளான் மிஸ் ஆகவில்லை.

அதிக கரன்சி
பிக் பாஸ் கொடுத்த கரன்சிக்கும் அதிகமாக 400 ரூபாய்க்கு மேல் மற்ற போட்டியாளர்கள் யாருமே 300 ரூபாய் கூட சம்பாதிக்காத நிலையில், பாலா போட்ட நரித் தந்திரந்தால் அதிக பணத்தை சுலபமாக அள்ளி விட்டார். ஆஜீத் மற்றும் ஷிவானியுடன் டீலிங் போட்டு ஈஸியா அதிக கரன்சிகளை ஜெயித்து விட்டார் பாலா.

சூப்பர் பவர்
அதிக கரன்சிகளை தங்க முட்டை டாஸ்க்கில் அள்ளிய பாலாவை பாராட்டிய பிக் பாஸ். அவருக்கு ஒரு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என்றும், உரிய நேரத்தில் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் சூப்பர் பவரை கொடுத்து செம ட்விஸ்ட்டை வைத்துள்ளார் பிக்பாஸ். அந்த பவர் என்னவாக இருக்கும், யாரை காப்பாற்ற இருக்கும் என்கிற விவாதம் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளது.

ஷிவானியை சேவ் பண்ண
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி அல்லது ஆஜீத் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவர் என ரசிகர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில், ஷிவனியை சேவ் பண்ணி விட்டு, ஆஜீத்தை வெளியேற்ற அந்த சூப்பர் பவரை பாலா பயன்படுத்துவாரா? என்கிற கோணத்திலும் சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

காப்பாற்றுமா? காலி பண்ணுமா?
ஆஜீத்துக்கு கிடைத்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் அவரை முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்து காப்பாற்றியது. அனிதாவுக்கு கிடைத்த டாப்புள் கார்ட் அவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றி சம்யுக்தாவை காலி பண்ணியது. ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த சூப்பர் பவர் சம்யுக்தாவை கேப்டன் ஆக்கியது. இந்நிலையில், பாலாவுக்கு கிடைத்துள்ள சூப்பர் பவர் என்ன செய்ய காத்திருக்கிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்ரனர்.


Click it and Unblock the Notifications











