Don't Miss!
- News
அதானி விவகாரம்.. எல்ஐசி, எஸ்பிஐ வங்கி சேமிப்புகளுக்கு பாதிப்பா.. வேல்முருகன் வைத்த முக்கிய டிமாண்ட்
- Lifestyle
இறந்த உடலை சாப்பிட்ட அரசர்கள் முதல் அரசவையில் சுயஇன்பம் செய்த அரசர் வரை தலைசுற்ற வைத்த மன்னர்கள்...!
- Finance
அதானி குழுமத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டி பார்த்த ஹிண்டர்ன்பர்க்.. 3 நாளில் 29% மதிப்பு சரிவு!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவும் நான் தான்.. அதிக வரி கட்டுற நபரும் நான் தான்.. டிரெண்டாகும் ரஜினி!
சென்னை: தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்திய நபர் என நடிகர் ரஜினிகாந்தை பாராட்டி வருமான வரி தினமான இன்று அவருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த விருது விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு விருதை வழங்க ரஜினிகாந்த் சார்பாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விருதை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் #HighestTaxPayer_Rajini என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர்.
டிஷ்
பேரை
போகஸ்
செய்யவில்லை..
பரத்
சொன்ன
விளக்கம்..
காண்டான
நடுவர்!

ரஜினிகாந்துக்கு விருது
வருமான வரித்துறை சார்பாக நடத்தப்பட்ட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அதிகமாக வரி செலுத்துபவர் என பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக இது போன்ற விருதுகள் ஏன் மற்ற நடிகர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், ரஜினிக்கு இப்போது கொடுப்பதற்கு பின்னணியில் என்ன காரணம் என்றும் ஏகப்பட்ட விவாதங்கள் சென்று கொண்டிருந்தாலும், இப்படியொரு விருது வழங்கப்பட்ட நிலையில், ரஜினி ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

ஹாஷ்டேக் டிரெண்டிங்
#HighestTaxPayer_Rajini என்கிற ஹாஷ்டேக்கை போட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். எளிமையான மனிதர் மட்டுமல்ல நடிகர் ரஜினிகாந்த் நேர்மையான மனிதர் என்றும் இந்த விருது மூலம் அது மீண்டும் ஒரு முறை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் ரஜினி ரசிகர்கள் ட்வீட் போட்டு அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

ஹையஸ்ட் பெயிட் ஆக்டர்
ஜெயிலர் படத்துக்காக இதுவரை இல்லாத அளவுக்கு 150 கோடி ரூபாய் வரை நடிகர் ரஜினிகாந்துக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள், "Highest paid actor um nanthan.. Highest tax payer um nanthan.." என அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் நான் தான்.. அதிகமாக வரி செலுத்தும் நபரும் நான் தான் என கெத்துக் காட்டி வருகின்றனர்.

ரஜினி அப்பவே சொல்லிட்டாரு
சினிமா இண்டஸ்ட்ரியிலேயே ஹையஸ்ட் பெயிட் ஆக்டர் ரஜினிகாந்த் தான் என நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு முன்பாக அளித்த பேட்டி வீடியோவையும் தற்போது ரசிகர்கள் தேடிப் பிடித்து ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் அதிக அளவில் லைக் செய்து ரீட்வீட்டும் அடித்து வருகின்றனர்.

நம்பர் ஒன் எப்பவுமே
விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகர்களாக பல காலங்களாக நீடித்து வந்தாலும், இன்னமும் அவர்களால் ரஜினிகாந்தை முந்த முடியவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகி விட்டது என்றும், ரஜினி தான் என்றுமே நம்பர் ஒன் என ரசிகர்கள் ட்வீட்களை போட்டு விஜய், அஜித் மற்றும் கமல் ரசிகர்களை ஓட்டி வருகின்றனர்.