twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருப்பில் ஜொலித்த மேடை... தெறிக்கவிட்ட ரசிகர்கள்.. இது காலா ஹைலைட்ஸ்!

    ரஜினியின் காலா திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

    |

    Recommended Video

    கருப்பு மேடை, மக்கள், ரஜினியின் மறக்க முடியாத பேச்சு- வீடியோ

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

    கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் காலா. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    Highlights of kaala audio release function

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

    இதோ விழா குறித்த சில ஹைலைட்ஸ்:

    • விழாவில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் ரசிகர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் மைதானம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் ரஜினிகாந்தை வாழ்த்தி ரசிகர்கள் கோஷமிட்டப்படி இருந்தனர்.
    • பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழா மேடை, முழுவதும் கருப்பு நிறத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ரஜினி உட்பட படக்குழுவினர் ஒருசிலரைத் தவிர அனைவரும் கருப்பு நிற உடையில் வந்திருந்ததால், மேடை முழுவதும் கருப்பு மயமாகக் காட்சி அளித்தது.
    Highlights of kaala audio release function

    • நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக நடன இயக்குநர் சாண்டி, ரஜினி டயலாக்குகள் மற்றும் பாடல்கள் அடங்கிய தொகுப்புக்கு நடனமாடினார்.
    • இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சுமார் 15 நிமிடம் தனது இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்டார். தாரை தப்பட்டை உட்பட பல்வேறு விதமான ஸ்டைல் பாடல்களின் வித்தியாசமான தொகுப்பாக இது இருந்தது.
    • காலா படக்குழுவினர் ஈஸ்வரிராவ், அருள்தாஸ் உள்ளிட்டோரின் கலந்துரையாடல் ரசிக்கும்படி இருந்தது. ரஜினியுடன் நடித்த தங்களது அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
    • இயக்குநர் ரஞ்சித், நடிகரும், காலா பட தயாரிப்பாளருமான தனுஷ் இருவரும் பேசினர். அதனைத் தொடர்ந்து ரஜினி பேசத் தொடங்கினார்.
    Highlights of kaala audio release function

    • ரஜினி பேச்சைக் கேட்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அனைத்துப் பகுதிகளிலும் நுழைந்தது. முக்கிய விருந்தினர்கள் அமர்ந்திருந்த பகுதியிலும் ரசிகர்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • நேற்று காலையிலேயே இணையத்தில் காலா பட பாடல்கள் வெளியிடப்பட்டு விட்டதால், விழாவின் இறுதியில் காலா இசைத்தட்டுடன் ரஜினி போட்டோவிற்கு போஸ் கொடுக்க, விழா இனிதே நிறைவுற்றது.
    • விழா மேடையில் காலா படத்தில் இடம் பெற்றிருந்த ஜீப் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. விழாவில் காலா படத்தின் டீசர் திரையிடப்பட்டது.
    • இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மனைவி காலா என பிரிண்ட் செய்யப்பட்டிருந்த சேலை அணிந்திருந்தது பலரையும் கவர்ந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், பட அதிபர்கள் எஸ்.தாணு, டி.சிவா, தேனப்பன், நடிகைகள் மீனா, கஸ்தூரி, ரஜினிகாந்த் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    English summary
    Actor Rajni’s Kaala movie’s audio release function was held in Chennai YMCA ground yesterday in a grand manner.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X