twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Ilayaraja 75 highlights: உண்மையை உடைத்த ரஜினி.. உசுப்பேற்றிய உஷா உதுப்.. பாட்டுப்பாடிய யுவன் மகள்!

    இளையராஜா 75 நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நிகழ்ந்தன.

    |

    Recommended Video

    இளையராஜா 75 - சுவாரஸ்யமான விஷயங்கள்-வீடியோ

    சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய இளையராஜா 75 நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நிகழ்ந்தன.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர், நடிகையர் பலர் இளையராஜாவின் பாடல்களுக்கு ஆடியும், சில பாடல்களை பாடியும் ரசிகர்களை மகிழ்வித்தனர். இரண்டாவது நாளான நேற்று இளையராஜாவே தனது பாடல்களை, பல இசை கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். இதற்காக ஹங்கேரி நாட்டில் இருந்து பல இசை கலைஞர்கள் வந்திருந்தனர்.

    முக்கிய பிரபலங்கள்

    முக்கிய பிரபலங்கள்

    ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட முக்கிய திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் நள்ளிரவு வரை பொறுமையாக காத்திருந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

    ரஜினி சொன்ன உண்மை

    ரஜினி சொன்ன உண்மை

    விழாவில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்தன. நடிகர் ரஜினியை நடிகை சுகாசினி மேடைக்கு அழைத்து பேட்டி கண்டார். அப்போது வள்ளி திரைப்படத்தில் இளையராஜாவுடம் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த ரஜினி, வள்ளி படத்திற்கு கார்த்திக் ராஜா தான் இசையமைத்தார் என்றும், இளையராஜா இசையமைக்கவில்லை என்றும் கூறினார். ஆனால் படத்தின் டைட்டில் கார்டில் இசை - இளையராஜா என போடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கமலும் ஸ்ருதியும்

    கமலும் ஸ்ருதியும்

    கமல் தனது மகள் ஸ்ருதியுடன் சேர்ந்து இரண்டு பாடல்களை பாடினார். முதலில் மேடைக்கு கீழே ரஜினி அருகில் அமர்ந்திருந்த கமல், ஹே ராம் பாடலை பாடியபடியே மேடையேறினார். பின்னர் அவருடன் ஸ்ருதியும் மேடையில் இணைந்துகொண்டார். இந்த பாடலை தொடர்ந்து, நினைவோ ஒரு பறவை பாடலை, கமலும் ஸ்ருதியும் பாடினர். இளையராஜா இசையில் கமல் பாடிய முதல் பாடல் இது தான்.

    இளையராஜாவின் பேத்தி

    இளையராஜாவின் பேத்தி

    இளையராஜா குழுவினர் தளபதி படத்தின் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலை பாடிக்கொண்டிருந்தனர். அப்போது இளையராஜாவின் பேத்தி (யுவனின் மகள்), மேடை ஏறினார். பேத்தியை தூக்கிய இளையராஜா தனது ஹார்மோனிய பெட்டி அருகே நிறுத்தி, அவரை ஹார்மோனியம் வாசிக்க வைத்தார். பின்னர், அந்த பாடல் முடிந்ததும், பேத்தியை தூக்கி மைக் முன் கொடுத்து மாங்குயிலே பூங்குயிலே பாட்டை பாடச் சொன்னார். அந்த குழந்தை ஒரு வார்தை பாடி அசத்தியது

    உசுப்பேற்றிய உஷா உதுப்

    உசுப்பேற்றிய உஷா உதுப்

    நிகழ்ச்சி முடிவதற்கு நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டது. சுமார் 11.30 மணியளவில் ரம்பம்பம் பாடலை மனோவும், உஷா உதுப்பும் பாடினர். பார்வையாளர்களை உசுப்பேற்றி கைத்தட்ட வைத்து, ஆட்டமும் போட வைத்தார். ஹங்கேரி இசைக்குழுவைச் சேர்ந்த சில பெண்களும், சுஹாசினி, குஷ்பு உள்ளிட்டோரும் மேடையில் ஏறி ஆட்டம் போட்டனர். பின்னர் ஹரிச்சரனுடன் சேர்ந்து, தண்ணி தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான் பாடலை உஷா உதுப் பாடினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் தங்கள் கேலரியில் ஆட்டம் போட்டனர்.

    செல்போன் டார்ச் லைட்

    செல்போன் டார்ச் லைட்

    பின்னர் பார்வையாளர்களின் செல்போனில் டார்ச் லைட் ஆன் செய்ய சொல்லி, கண்ணே கலைமானே பாடலையும் உஷா உதுப் பாடினார். அவருடன் சேர்ந்து பார்வையாளர்களும் அந்த பாடலை பாடினர். நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் போன்றோர் எல்லாம் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்தபடி இசை கச்சேரியை கேட்டு ரசித்தனர்.

    English summary
    There was so many highlights in Ilaiayraja 75, like Kamal and his daughter Shrithu sang two songs and surprised the audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X