சிம்புவின் மாநாடு...ஹைலைட்ஸ் வெளியிட்ட வெங்கட்பிரபு
சென்னை : சிம்பு நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருப்பது மாநாடு. இந்த படத்தில் ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் கூறுவது, இந்த படத்தில் சிம்புவின் லுக், ஆக்ஷன் ஸ்டைல் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது என்பது தான்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் படத்தின் ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷினி தனது டப்பிங் வேலைகளை முடித்தார். சிம்பு உள்ளிட்ட மற்றவர்களும் டப்பிங் வேலைகளை முடித்துள்ளனர்.

ட்விட்டர் டாக்கில் மாநாடு
வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் மாநாடு படக்குழுவினரில் ட்விட்டர் டாக்கில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

ஹைலைட்ஸ் வெளியிட்ட வெங்கட் பிரபு
இதில் இசையமைப்பாளர் யுவன் உள்ளிட்ட பலரும் மாநாடு படம் பற்றி பல அப்டேட்களை வெளியிட்டார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் படத்தின் டைரக்டரான வெங்கட் பிரபு, சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டார். சில முக்கிய காட்சிகள் பற்றியும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சிம்பு ஃபாமிற்கு வந்துட்டார்
வெங்கட் பிரபு கூறுகையில், சிம்பு - எஸ்ஜே சூர்யா இடையேயான மோதல் காட்சிகள் மிக நன்றாக வந்துள்ளது. சிம்பு ஓடும் காட்சிகளை படமாக்க நாங்கள் காரை பயன்படுத்தி தான் படப்பிடிப்பை நடத்தினோம். சிம்பு தற்போது மீண்டும் தனது பழைய ஃபாமிற்கு திரும்பி உள்ளார்.

டைம் லூப் தொழில்நுட்பம்
ஒவ்வொருவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சையின்ஸை பயன்படுத்தி உள்ளோம். அதே போன்று டைம் லூப் தொழில்நுட்பத்தையும் தேவைக்கு ஏற்ப சிறப்பான முறையில் பயன்படுத்தி உள்ளோம்.


Click it and Unblock the Notifications











