கருமம்.. சமந்தாவை அசிங்கப்படுத்தாதீங்க.. சாகுந்தலம் கெட்டப் போட்ட சீரியல் நடிகை.. விளாசும் ஃபேன்ஸ்!

சென்னை: சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் நேற்று வெளியான நிலையில், ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் அந்த படத்துக்கு குவிந்து வருகிறது.

ஆனாலும், படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சமந்தாவின் நடிப்பு மற்றும் படம் முழுவதும் அழகு பதுமையாக அவர் வருவதை ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை ஹிமா பிந்து சாகுந்தலம் சமந்தா கெட்டப்பை போட்டு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், சமந்தா ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Hima Bindhu turned like Shaakuntalam Samantha gets trolled

சாகுந்தலம் சக்சஸ் கொடுத்ததா?: நடிகை சமந்தா நடிப்பில் வெளியான உமன் சென்ட்ரிக் படங்கள் எல்லாமே ஹிட் அடித்து வந்த நிலையில், சாகுந்தலம் திரைப்படம் சற்றே சறுக்கலை கொடுத்துள்ளதாக ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன. முன்னதாக வெளியான யசோதா திரைப்படம் 50 கோடி வரை வசூல் செய்து வேறலெவல் வெற்றியை சமந்தாவுக்கு பரிசளித்தது.

சாகுந்தலம் வசூல்: சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை என்றும் வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Hima Bindhu turned like Shaakuntalam Samantha gets trolled

சமந்தாவாக மாறிய சீரியல் நடிகை: கலர்ஸ் தமிழ் சீரியலான இதயத்தை திருடாதே தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் சின்னத்திரை நடிகை ஹிமா பிந்து திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாகுந்தலம் படத்தில் வரும் சமந்தாவை போல மேக்கப் போட்டுக் கொண்டு எடுத்த வீடியோவை வெளியிட்டு அந்த படத்திற்கான ப்ரோமோஷனை செய்திருக்கிறார்.

அப்படியே சமந்தா மாதிரியே இருக்கீங்க ஹிமா பிந்து என்றும் மேக்கப் மற்றும் கெட்டப் வேறலெவல் என ஹிமா பிந்துவின் ரசிகர்கள் அவரது இந்த முயற்சியை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதே சமயம் சமந்தா ரசிகர்கள் ஹிமா பிந்துவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Hima Bindhu turned like Shaakuntalam Samantha gets trolled

கருமம்.. சமந்தாவை அசிங்கப்படுத்தாதீங்க: ஹிமா பிந்து சாகுந்தலம் சமந்தாவாக மாறிய நிலையில், அவருக்கு லைக்குகள் மற்றும் பாராட்டுக்கள் குவிவதை போலவே ஹேட்டர்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

சமந்தா ரசிகர் ஒருவர், கருமம்.. சமந்தாவை அசிங்கப்படுத்தாதீங்க என்றும், இன்னொரு நெட்டிசன் பைத்தியக்காரி என்றும் கமெண்ட் போட்டு விளாசித் தள்ளி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X