நடுராத்திரியில் காதலியை திருமணம் செய்த தசாவதாரம் இசையமைப்பாளர்
மும்பை: கமல் ஹாஸன் நடித்த தசாவதாரம் படத்தின் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமய்யா தனது காதலியை நள்ளிரவில் திருமணம் செய்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்த தசாவதாரம் படத்தின் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமய்யா. அவர் தனது நீண்ட நாள் காதலியான சோனியா கபூரை மும்பையில் உள்ள தனது வீட்டில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
அந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணம்
ஹிமேஷ், சோனியா கபூரின் திருமணம் எளிய முறையில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஹிமேஷின் மகன் ஸ்வயம் கலந்து கொண்டார். இது ஹிமேஷின் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து
ஹிமேஷ் தனது 21வது வயதில் கோமல் என்பவரை திருமணம் செய்தார். கோமலுடன் 22 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு அவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் விவாகரத்து செய்தார். இந்நிலையில் தான் சோனியாவை திருமணம் செய்துள்ளார்.

நடிப்பு
சோனியா திருமணத்திற்கு பிறகு நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார். ஹிமேஷ் இரண்டு புதுப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஹிமேஷ் இசையமைப்பது தவிர்த்து படங்களில் நடிக்கவும் செய்கிறார்.

நள்ளிரவு
இரவு 1.30 மணிக்கு தான் நல்ல நேரம் என்று ஜோதிடர் தெரிவித்தாராம். நடுராத்திரியில் நடக்கும் திருமணத்திற்கு எப்படி அனைவரையும் அழைப்பது என்று யாரையும் அழைக்கவில்லையாம்.

பார்ட்டி
திருமணம் நேரம் கெட்ட நேரத்தில் நடந்ததால் பாலிவுட் பிரபலங்களுக்காக பிரமாண்ட பார்ட்டி கொடுக்கிறாராம் ஹிமேஷ். அவர் தனது மனைவி சோனியாவுடன் இன்று தேனிலவுக்கு கிளம்புகிறார்.


Click it and Unblock the Notifications











