»   »  இந்தி(ய) சினிமா..லாலும் வருத்தம்

இந்தி(ய) சினிமா..லாலும் வருத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தி சினிமா தான் இந்திய சினிமாவா, இந்தியை விட நல்ல படங்களைத் தரும் தென்னிந்திய சினிமா இந்தியசினிமா இல்லையா என்று துபாயில் இந்திக்காரக்கள் நிறைந்த சபையில் குரல் கொடுத்த கேரள சூப்பர் ஸ்டார்மம்மூட்டிக்கு இன்னொரு கேரள நடிகரான மோகன் லால் முழு ஆதரவு தந்துள்ளார்.

சமீபத்தில் துபாயில் சர்வதேச இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சிநடந்தது. வழக்கமாக இதில் இந்திப் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள்.

பெயரில்தான் இந்தியா இருக்கும். ஆனால் விழாவில் முழுக்க முழுக்க இந்திப்படங்கள் மட்டுமே திரையிடப்படும்.

ஆனால், வளைகுடாவில் பெருவாரியாக வசிக்கும் மலாையாளிகள், தமிழர்களிடம்பணம் வசூல் பண்ண நினைத்த விழா அமைப்பாளர்கள் இம்முறை வழக்கத்துக்குமாறாக சில தென்னிந்திய மொழிப் படங்களையும் திரையிட்டனர்.

படங்களைத் திரையிட்டவர்கள், விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய படங்களைபுறக்கணித்தனர். அத்தனை விருதுகளையும் இந்திப் படங்களுக்கே தந்தார்கள்.

அந்த விழாவுக்குச் சென்றிருந்த மம்மூட்டி மேடையில் ஏறி

இந்தித் திரையுலகைச் சேர்ந்தவர்களை போட்டு வெளுத்து வாங்கினார்.

இந்த விழாவுக்கு பேசாமல், சர்வதேச இந்தி திரைப்பட விருது வழங்கும் விழா என்றுபெயர் வைத்திருக்கலாம்.

தென்னிந்திய மொழிப் படங்கள் இந்திய படங்கள் இல்லையா?

இந்திப் படங்கள் மட்டுமே விருதுக்குப் போட்டியிடும் வகையில் அமைந்துள்ள இந்தவிழாவை சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா என்று அழைப்பதேஅபத்தம்.

இந்த விருது விழாவை இந்தி விருது விழா என்று கூட அழைக்க முடியாது. காரணம்இன்றைக்குப் பல இந்திப் படங்கள் வெளிநாடுகளில் தான் தயாரிக்கப்படுகின்றன.இந்தியாவின் அடையாளம் அவற்றில் சிறிதும் இல்லை என்று கொந்தளித்துவிட்டுமேடையிலிருந்து கீழே இறங்கினார்.

இதையடுத்து இந்தியா திரும்பிய மம்மூட்டியை பல வட நாட்டு சேனல்கள்மொய்த்துக் கொண்டு கேள்விகளால் துளைக்க, பதிலுக்கு அதே துபாய் கோபத்தோடுபதில் தந்தார்.

மேலும் தென்னிந்தியத் திரையுலகின் மற்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இதுபோலபேச தைரியம் இல்லாமல் இருக்கலாம். எனக்கு தோன்றியது.. பேசினேன். நான்பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக இருக்கிறேன் என்று சிலருக்குஉரைப்பது போல சொன்னார் மம்மூட்டி.

இந்த விஷயத்தில் நம் ஊர் நடிகர்களும், தெலுங்கு கலர் சட்டை நடிகர்களும் இதுவரைவாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், மம்மூட்டியின் போட்டியாளரான மோகன்லால் அவருக்கு ஆதரவாகப்பேசியுள்ளார்.

மோகன்லால் கூறுகையில்,

மம்மூட்டி பேசியதில் வலுவான கருத்து உள்ளதாகவே நினைக்கிறேன்.

இந்தியாவில் தயாராகும் எல்லா படங்களுக்கும் ஒரே மரியாதை தரப்பட வேண்டும்.இந்திய சினிமா என்று சொல்லிக் கொண்டு தென்னிந்திய சினிமாவை ஒதுக்கிவைப்பது சரியல்ல.

இது ஒட்டுமொத்த சினிமாவுக்கும் நல்லதல்ல. அதைத் தான் மம்மூட்டிசொல்லியிருக்கிறார். அவர் சொன்னது சரியே என்று கூறியுள்ளார் மோகன்லால்.

மோகன்லால் இப்போது தமிழில் ஜீவா-கோபிகா நடிக்கும் அரண் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில்அவருக்கு ஜோடியாக லட்சுமி கோபாலசாமி நடிக்கிறார். சோப்பு, எண்ணெய், பினாயில் என எல்லா வகையானடிவி விளம்பரங்களிலும் இந்த லட்சுமி கோபாலசாமியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இதில் ஜீவாவுக்கு கமாண்டோ ரோல். அவருக்கு பாஸாக மோகன்லால் நடிக்கிறார்.

Read more about: mohanlan supports mamooty

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil