பெரிய ஸ்டாரா இருந்தாலும், அவர் ரூட்டே தனி தான்”: அஜித்தை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் பிரபலம்

சென்னை: ரன்பீர் கபூர் நடித்துள்ள 'பிரம்மாஸ்த்திரா' திரைப்படம் செப்டம்பர் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Recommended Video

AjithKumar | எதிரே வந்த பெண், Thala செய்த காரியம்! நெகிழும் ரசிகர்கள் *Kollywood | Filmibeat Tamil

அயன் முகர்ஜி இயக்கியுள்ள பிரம்மாஸ்த்திரா படத்தில் ரன்பீர் கபூருடன் அமிதாப்பச்சன், ஆலியாபட் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ரன்பீர் கபூர்.

பாலிவுட்டில் புதிய முயற்சி

பாலிவுட்டில் புதிய முயற்சி

அயன் முகர்ஜி இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ‘பிரம்மாஸ்த்திரா' படம், அடுத்த மாதம் 9ம் தேதி வெளியாகிறது. மிகப் பிரம்மாண்டமான பொருட் செலவில் பான் இந்தியா படமாக வெளியாகும் பிரம்மாஸ்த்திரத்தில், ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் அமிதாப் பச்சன், ஆலியா பட், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்ஸன் ஜானரில் நெருப்பை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர்

ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர்

பிரம்மாஸ்த்திரம் திரைப்படம் பான் இந்தியா ஜானரில் வெளியாகவுள்ளதால், இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில், ஹீரோ ரன்பீர் கபூர், நாகஜுனா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். அதன்படி, இன்று சென்னையில் நடைபெற்ற பிரம்மாஸ்த்திரம் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், ரன்பீர் கபூர், நாகர்ஜுனா ஆகியோருடன், தெலுங்கு முன்னணி இயக்குநர் ராஜமெளலியும் கலந்துகொண்டார்.

அஜித் பற்றி பேசிய ரன்பீர் கபூர்

அஜித் பற்றி பேசிய ரன்பீர் கபூர்

'பிரம்மாஸ்த்திரம்' ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், இந்தப் படம் குறித்தும், இது உருவானது பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களை ரன்பிர் கபூர் பகிர்ந்துகொண்டார். அப்போது அவரிடம், நடிகர் அஜித்குமார் பற்றி கேட்கப்பட்டது. தமிழில் முன்னணி நடிகராக கலக்கி வரும் அஜித்துக்கு, இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகராக மட்டும் இல்லாமல், பைக் ரேஸர், கார் ரேஸர், ட்ரோன் கண்டுபிடிப்பு, துப்பாக்கிச் சுடுதல் என பன்முகத் திறமையாளராக ஜொலித்து வருகிறார் அஜித்.

அஜித் ரூட்டு எப்பவுமே தனிதான்

அஜித் ரூட்டு எப்பவுமே தனிதான்

இந்நிலையில், அஜித் பற்றிய பேசிய ரன்பீர் கபூர், "அஜித் அவ்வளவு பெரிய மெகா ஸ்டாராக இருந்தாலும், அந்த புகழின் வெளிச்சத்தில் இருந்து அவர் விலகியே இருக்கிறார். அதேபோல், நட்சத்திர பிம்பங்களை விரும்பாத அஜித், எப்போதும் சிறந்த மனிதராக எல்லோரிடமும் அன்பு காட்டுகிறார்" என தெரிவித்துள்ளார். மேலும், அஜித்தின் ரூட்டே தனித்துவமானது என புகழ்ந்துள்ளார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X