பிக் பாஸ் சீசன் 13 - ஒரே படுக்கையில் பிராமிண் பெண்ணும் காஷ்மீரி முஸ்லீம் ஆணும்

சென்னை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 13அவது சீசனில், போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் படி, அந்த வகையில் இந்த டாஸ்க்கின் படி மஹிரா ஷர்மா என்ற ஒரு பிராமண இந்து பெண்ணும், காஷ்மீரி முஸ்லீம் ஆணான அசிம் ரியாஸ் என இந்த இரு போட்டியாளர்களும் ஒரே படுக்கையை பகிர்ந்துள்ளனர். அவர்கள் இருவரும் கொஞ்சியபடி நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி. இது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராட்டி, பெங்காலி என 7 மொழிகளில் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி 2006ஆம் ஆண்டு இந்தியில் தான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியில் பிக் பாஸ் சீசன் 13 நடைபெற்று கொண்டிருக்கிறது.

Hindi Big Boss Season 13 Viral on Social Media

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 3 அக்டோபர் 6 தேதியோடு நிறைவு பெற்றது. இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் என்ற இளைஞர் பிக் பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்றார்.

இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியினை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13ஆவது சீசன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் பேட் பிரெண்ட்ஸ் ஃபார் எவர் என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. எதிர் பாலின போட்டியாளர்கள் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த டாஸ்க்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில், பெரும்பாலும் தங்களது டிஆர்பி ரேட்டிங்காக இது போன்ற சர்ச்சையை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில் இந்த டாஸ்க்கின் படி மஹிரா ஷர்மா என்ற ஒரு பிராமண இந்து பெண்ணும், காஷ்மீரி முஸ்லீம் ஆணான அசிம் ரியாஸ் என இந்த இரு போட்டியாளர்களும் ஒரே படுக்கையை பகிர்ந்துள்ளனர். அவர்கள் இருவரும் கொஞ்சியபடி நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் கடும் கண்டனத்திற்குரியது என்று சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள். முஸ்லீம் ஆணான அசிம் எப்படி ஒரு பிராமண பெண்ணை தொடலாம் என பலதரப்பட்ட கண்டனங்களையும், விமர்சனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இப்படி பரபரப்பாக பரவி வரும் இந்த சர்ச்சைக்கு தற்போது பதிலளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர்கள் பிக் பாஸ் சீசன் 13 போட்டியாளர்களான மஹிரா சர்மா மற்றும் அசிம் ரியாஸ் அல்ல என்றும் அவர்கள் 2015ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 9ல் பங்கேற்ற சுயாஷ் ராய் மற்றும் கிஷ்வர் வணிகர் ஆகியோர் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள், வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருவதால் இது போன்ற காட்சிகளை ஒளிபரப்புவது தவறு.

இந்த சர்ச்சைக்கு ஒரு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டாலும், இது போன்ற பாலியல் தொடர்பான காட்சிகளை ஒளிபரப்புவது கண்டனத்திற்குரியது என்றும் உடனடியாக இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியினை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X