twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாத்ரூம்ல புகுந்துக்கிட்டு சேட்டை.. தெறிக்கவிடும் பிக்பாஸ் நிகழ்ச்சி.. என்னம்மா நடக்குது அங்க!

    |

    மும்பை : சல்மான் கான் தொகுத்து வழங்க இந்தியில் பிக்பாஸ் சீசன் 16 நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

    கடந்த 1ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்க தந்து வருகிறது.

    இந்த நிகழ்ச்சியை 13வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சல்மான் கான்.

    அமேசான் ப்ரைமில் வெளியான பொன்னியின் செல்வன்... ஓடிடி ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்…அமேசான் ப்ரைமில் வெளியான பொன்னியின் செல்வன்... ஓடிடி ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்…

    பிக்பாஸ் சீசன் 16 நிகழ்ச்சி

    பிக்பாஸ் சீசன் 16 நிகழ்ச்சி

    பாலிவுட்டின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்து தற்போது 16வது சீசனை சிறப்பாக நடத்தி வருகிறது. கடந்த 12 சீசன்களை சிறப்பாக நடத்தி ரசிகர்களை கவர்ந்த பாலிவுட் ஹீரோ சல்மான் கான், தற்போது 13வது முறையாக இந்த சீசனை நடத்தி வருகிறார்.

    சர்ச்சைகளுடன் துவங்கிய நிகழ்ச்சி

    சர்ச்சைகளுடன் துவங்கிய நிகழ்ச்சி

    இந்த நிகழ்ச்சி சற்று தாமதமாகவே துவங்கியது. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பேவரிட்டாக உள்ள நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான்கான் 1000 கோடி ரூபாய் கேட்டதாகவும் அதனால்தான் நிகழ்ச்சியை துவக்க தாமதமானதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

    மிட் நைட் மசாலா

    மிட் நைட் மசாலா

    ஆனால் இந்த தகவலை சல்மான் கான் மறுத்தார். இதனிடையே கடந்த 1ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக துவங்கி சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறது. நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யங்களும் மிட் நைட் மசாலாக்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பிக்பாஸ் சீசன் 16 நிகழ்ச்சியின் அத்துமீறல்கள்

    பிக்பாஸ் சீசன் 16 நிகழ்ச்சியின் அத்துமீறல்கள்

    இந்த நிகழ்ச்சியில் பல அத்துமீறல்களை போட்டியாளர்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக நிகழ்ச்சியின் இளம் ஆண் -பெண் போட்டியாளர்கள், நடு ஹாலில் ரொமான்ஸ் செய்கின்றனர். முத்தம் கொடுக்க பாய்ந்த அவர்கள், என்ன நினைத்தார்களோ நிறுத்திவிட்டு, உடனடியாக வேகவேகமாக பாத்ரூமிற்கு செல்கின்றனர்.

    வேகம் காட்டும் பெண் போட்டியாளர்

    வேகம் காட்டும் பெண் போட்டியாளர்

    இதில் மிகவும் வேகமாக நடந்துக் கொள்கிறார் அந்த பெண் போட்டியாளர். அவர்தான் சக போட்டியாளரை வேக வேகமாக பாத்ரூமிற்கு இழுத்து சென்று கதவை மூடுகிறார். தொடர்ந்து சிறிது நேரம் உள்ளேயே இருக்கும் இவர்கள், வெளியில் வருகிறார்கள். உள்ளே என்ன கசமுசா நடந்திருக்கும் என்று ரசிகர்கள் பல்வேறு யூகங்களை கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.

    விஜய் டிவிக்கு நிகழ்ச்சியை நடத்த தெரியவில்லை?

    விஜய் டிவிக்கு நிகழ்ச்சியை நடத்த தெரியவில்லை?

    இதனிடையே இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழ் ரசிகர் ஒருவர், விஜய் டிவிக்கு சரியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த தெரியவில்லை என்றும், இந்தி காரனுங்க கிட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நகைச்சுவையுடன் கமெண்ட் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    English summary
    Hindi big boss season 16 show and its episodes makes fans of Hindi and tamil fans shocking
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X