மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டேன்.. அவரால் கிடைத்த வாழ்க்கை.. நடிகையின் உருக்கமான பதிவு!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஹினா கான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை மூலம் அதில் இருந்து மீண்டு வருகிறார். சிகிச்சை பெறும் போட்டோவை போட்டு பலரை துயரத்தில் ஆழ்த்திய அவர், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தனது கணவர் குறித்து கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

மாடல் அழகி ஹினா கான், ஹிந்தி பிக் பாஸ் சீசன் 11 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பிரபலமான இவர் கில்லாடி என்ற ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். அதன் பின், அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வந்த ஹினா கானுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாம் நிலை மார்பக புற்றுநோயால், பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்குரிய சிகிச்சை பெற்று வருவதாகவும் பகிர்ந்து இருந்தார். தொடர்ந்து புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் ஹினா மருத்துவமனையில் சிறுநீரக பையை கையில் வைத்துக்கொண்டு, மருத்துவமனையில் நடந்து செல்லும் போட்டோவை பகிர்ந்து இருந்தார்.

hina khan breast cancer

உருக்கமான பதிவு: இந்நிலையில் நடிகை ஹினா கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் குறித்து மிகவும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிக்சை மேற்கொண்ட போது மொட்டையத்துக்கொண்டேன். அப்போது, அவரும் தன் தலையை மொட்டையடித்துக்கொண்டார். என் தலை முடி எப்போது வளர ஆரம்பித்ததோ, அப்போது தான் அவரும் முடி வளர அனுமதித்தார். விட்டு விலகி செல்ல நூறு காரணங்கள் இருந்தாலும் எப்போதும் என் பக்கம் இருந்து, என்னை கவனித்துக்கொண்டு இருந்த அந்த தன்னலமற்ற மனிதனுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்.

hina khan breast cancer

என்னுடன் இருந்தார் : நாங்கள் இருவரும் வாழ்க்கையில் கடுமையான மற்றும் மெல்லிய காலத்திலும் ஒன்றாக வாழ்ந்தோம், ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்கிறோம். நாங்கள் இருவரும் எங்கள் தந்தையை இழந்து அழுது போது ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்திக்கொண்டோம். கோவிட்டால் நான் பாதிக்கப்பட்ட போதும், ஒரு நாளைக்கு 3 முக கவசத்தை அணிந்து கொண்டு என்னுடன் இருந்தார். எனது நோயின் இந்த கட்டத்தில். எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

hina khan breast cancer

கடவுள் கொடுத்த வரம்: புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதும், நாங்கள் கவலையுடன் நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தோம். மருத்துவர்களில் யாரையும் சந்திப்பதற்கு முன், நாம் சரியான திசையில் தான் சென்று கொண்டு இருக்கிறோமா என பல ஆராய்ச்சிகளை செய்து, அதை அவர் உறுதிப்படுத்திக் கொண்டார். எனக்கு கீமோ சிகிச்சை ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அவர் எனக்கு வழிகாட்டியாய் இருந்தார். என்னை சுத்தம் செய்வது, உடை மாற்றுவத அனைத்தையும் எனக்காக செய்கிறார். கடந்த இரண்டு மாதங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. இந்த கடுமையான நேரத்திலும் எனக்கு கிடைத்த ஒரே நல்ல விஷயம் நீங்கள் தான். நான் உன்னை எப்போதாவது புண்படுத்தியிருந்தால், என்னை மன்னித்துவிடு, இருவரும் பல முறை சேர்ந்து சிரித்தும், அழுதும் இருக்கிறோம். இனியும் ஒருவருக்கொருவர் கண்ணீரைத் துடைப்போம். ஐ லவ் யூ.. நீ எனக்கு கடவுள் கொடுத்த வரம் என ஹினா கான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பகிர்ந்துள்ளார்.

hina khan breast cancer

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X