என்ன கண்றாவி.. ஆபாசமாக உடை அணிந்து நடுரோட்டில் சுற்றி திரிந்த நடிகை..கைது செய்த போலீஸ்!
மும்பை: மோசமான உடை அணிந்து தெருவில் நடமாடிய உர்ஃபி ஜாவேத்தை மும்பை போலீசார் கைது செய்தனர்.
இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான உர்ஃபி ஜாவேத், அந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் கூட தாக்குபிடிக்க முடியாமல் வெளியேற்றப்பட்டார்.
அந்த நிகழ்ச்சிக்கு பின், தான் பெற்றோரால் கஷ்டப்பட்டது குறித்தும், கொடுமைப்படுத்தப்பட்டது குறித்தும் பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

உர்ஃபி ஜாவேத்: ரசிகர்கள் காட்டிய இரக்கத்தை தவறாக பயன்படுத்திக் கொண்ட உர்ஃபி ஜாவேத், விதவிதமா கவர்ச்சி உடைகளை அணிந்து ரசிகர்களை பித்து கொள்ள வைத்தார். இவர் பதிவிடும் போட்டோக்களை பார்க்கும் போது இந்த பொண்ணுக்கு டிரஸ் போடாவே பிடிக்காதா என்று கேட்கும் அளவுக்கு படு மோசமான உடையாக இருக்கும். ஓவர் கவர்ச்சியால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும்,அதைபற்றி அவர் கண்டுகொள்வதே இல்லை.
கைது செய்த போலீஸ்: இந்நிலையில், ஆபாசமாக உடை அணிந்து நடுரோட்டில் சுற்றி திரிந்த நடிகை உர்ஃபி ஜாவேத்தை மும்பை போலீசார் கைது செய்ததாக இணையத்தில் வீடியோ வைரலானது. ஆனால், உர்ஃபி ஜாவேத் தான் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை என்றும், ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்றும், வீடியோவில் வந்தவர்கள் உண்மையானவர்கள் போலீஸ் அதிகாரிகள் இல்லை என்று கூறியிருந்தார்.

என்னை தடுக்கவே முடியாது: மேலும், உர்ஃபி ஜாவேத் பலவிதமான கேட்டப்பில் கம்பிக்கு பின்னால் இருக்கும் வீடியோவை பகிர்ந்து, நான் மோசமான உடைக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டேன், ஆனால் எதுவும் என்னைத் தடுக்க முடியாது.. @Freakinsindia உடன் FREAKIN UORFICATION இணைவதில் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
வழக்குப்பதிவு: உர்ஃபி ஜாவேத் இந்த செயலால் கடுப்பான மும்பை காவல் துறை தனது எக்ஸ் தளப்பக்கத்தில், மலிவான விளம்பரத்திற்காக, சட்டத்தை கையில் எடுத்த குற்றத்திற்காக வீடியோவில் இடம் பெற்றவர்கள் மீது 171, 419, 500, 34 ஐபிசி பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை உர்ஃபி சர்ச்சையில் சிக்கிவது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம் பாந்த்ரா காவல் நிலையத்தில் உர்ஃபியின் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











