இணையத்தில் கசிந்த பிக்பாஸ் வீட்டின் படுக்கையறை போட்டோக்கள்.. என்னா ஆடம்பரம்.. யப்பா!
மும்பை: பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டின் பெட் ரூம் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி 14வது சீசனை எட்டியுள்ளது. கடந்த 13 சீசன்களும் பெரும் ஹிட்டான நிலையில் இந்த சீசனும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்துள்ளது. விரைவில் இந்தி பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

பிக்பாஸ் வீட்டின் போட்டோக்கள்
கடந்த சீசனை போல் இந்த சீசனையும் பாலிவுட் தாதா என அழைக்கப்படும் என சல்மான் கான்தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பிக்பாஸ் வீட்டின் படுக்கையறை உட்பட பல போட்டோக்கள் கசிந்து வைரலாகி வருகிறது.

வழக்கம் போல் ஆடம்பரம்
அந்த படங்களில் பிக்பாஸ் வீட்டில் இடம் பெற்றுள்ள லிவிங் ரூம், டைனிங் டேப்பிள், பெட்ரூம், மற்றும் காமன் ஏரியா ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த பிக்பாஸ் வீடும் வழக்கம் போல் ஆடம்பரமாகத் தெரிகிறது. சேர்கள் கூட செம காஸ்ட்லியாக உள்ளன.

பெரும் ட்ரீட்
கிட்சனும் மாடர்னாக உள்ளது. பெயின்ட்டிங் ரூமும் கலக்கலாக உள்ளது. பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதை போன்றே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் பார்வையாளர்களுக்கு பெரும் ட்ரீட்டாக இருக்கும் என தெரிகிறது.

நல்ல வரபேற்பு
பிக்பாஸ் 14 நிகழ்ச்சி தொடர்பான புரமோக்களை வெளியிட்டு ரசிகர்களை தயாரிப்பாளர்கள் தயார் படுத்தி வருகின்றனர். பிக்பாஸ் புரமோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video

சூடாகவும் சுவாரசியமாகவும்
பிக்பாஸ் 14 இந்தி மற்றும் பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சிகளின் புரமோக்கள் ஒன்றாகதான் வெளியானது. ஆனால் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி செம சூடாகவும் சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் பிக்பாஸ் சீசன் 4 அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











