தனுஷ் & மாரி செல்வராஜை புகழ்ந்த பிரபல ஹிந்தி இயக்குனர்!

சென்னை: தனுஷ், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் கர்ணன்.

இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.

மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்த இந்த படம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வெற்றியும் பெற்றது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை இயக்கினார். அதன் விளைவாக தொடர் வெற்றி கிடைத்தது. இதன் வெற்றியை தொடர்ந்து தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

நீளும் வரிசை

நீளும் வரிசை

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என செம பிசியாக உள்ள தனுஷ், The Gray Man படப்பிடிப்பை முடித்த பின்னர் நாடு திரும்பவுள்ளார். நாடு திரும்பியவுடன் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதுமட்டுமின்றி தொடர்ந்து தனுஷுக்கு 7,8 படங்கள் வரிசையில் உள்ளன.

பிரபலங்கள் பாராட்டு

பிரபலங்கள் பாராட்டு

இந்நிலையில் தனுஷின் கர்ணன் திரைப்படம் கடந்த வாரம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. படத்தை திரையில் பார்க்க முடியாமல் போன பலரும் அமேசான் ப்ரைம்-ல் வந்த பிறகு படத்தை பார்த்து பாராட்டினர். பல திரையுலக பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

புகழாரம் சூட்டினார்

புகழாரம் சூட்டினார்

தனுஷின் Atrangi Re (இன்னும் வெளிவரவில்லை) படத்தை இயக்கியுள்ள பிரபல ஹிந்தி இயக்குனர் ஆனந்த் L ராய் அமேசான் ப்ரைம்-ல் கர்ணன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனுஷ் & மாரி செல்வராஜுக்கு புகழாரம் சூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X