பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது.. விஜய்யின் 'மாஸ்டர்' இந்தி டப்பிங்கிற்கு அதிக எதிர்ப்பார்ப்பு!

By

சென்னை: மாஸ்டர் படத்தின் இந்தி டப்பிங்கிற்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் நடித்து முடித்துள்ள படம், மாஸ்டர். இதில், அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

கொரோனா தீவிரம்

கொரோனா தீவிரம்

இதில் விஜய், கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாஸ்டர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சமீபத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. இதனால் இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில்

கொரோனா காலகட்டத்தைப் பயன்படுத்தி, இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மற்ற மொழிக்கான டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கி முடித்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட உள்பட மேலும் சில மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.

Recommended Video

Vetrimaran Soori combo made Major Changes in Story | மீண்டும் ஒரு நாவல்
ஏகப்பட்ட எதிர்பார்ப்பு

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு

விஜய் நடிக்கும் படம் ஒன்று, ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் வெளியாவது இதுதான் முதன்முறை. இந்த படத்தின் இந்தி மொழிமாற்றத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வட இந்திய சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. படத்தின் டீசர் பலத்தை வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் படத்தின் டிரைலரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X