பாலிவுட் வரை சென்ற ஆண்பாவம் பொல்லாதது பஞ்சாயத்து.. பெண்களுக்கு எதிரான படம் என கடுமையான விமர்சனங்கள்!

சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் தொடர்ந்து தமிழ் கலாச்சாரம் என காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் தாலி அணிவது சரியா? தவறா? தாலியை ஒரு பொருட்டாகவே கருத தேவையில்லை என்கிற சித்தாந்தங்களுடன் நீயா நானா டாபிக் போல சில படங்கள் வெளியாகி உள்ளன.

அதில், கமர்ஷியல் படமாக உருவான டியூட் மற்றும் ஆண் பாவம் பொல்லாதது படங்கள் அதிகளவில் விமர்சனங்களையும் அதே சமயம் வரவேற்பையும் பெற்றது தான் மிகப்பெரிய ஆச்சர்யம்.

Hindi fans also starting debate on Rio Raj s Aan Paavam Pollathathu movie scenes
Photo Credit:

பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்துவதற்கு எதிராக ஆயிரம் படங்கள் வெளியாகி உள்ள நிலையில், போலி பெண்ணியவாதிகளும் சமூகத்தில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டனர் என்பதை மையமாக வைத்து ஆண்களும் பாவம் என ரியோ ராஜ் நடித்த ஆண் பாவம் பொல்லாதது படத்திற்கு எதிராக கடுமையான கண்டனங்களும் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.

சினிமாவில் சமூக அரசியல்: காலம் காலமாகவே சினிமாவில் அரசியல் கருத்துக்கள் நிறைந்த பல படங்களும், கலாச்சாரம் என சொல்லப்படும் விஷயத்தில் உள்ள மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சமூக அரசியல் படங்கள் வந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதுபோன்ற படங்கள் வரவேண்டும் என்பது தான் இங்கே அண்டர் லைன் பண்ண வேண்டிய விஷயமும் கூட. ஆனால், சமூக அரசியலை கையில் எடுத்துக் கொண்டு சரியான கருத்துக்களை படங்களில் இயக்குநர்கள் வைக்கிறார்களா? இல்லையா? என்பதும் இதில் மிகப்பெரிய கேள்வியாக மாறிவிடுகிறது.

மாமன்னன், டியூட் வில்லன்களை கொண்டாடிய ரசிகர்கள்: மாமன்னன் படத்தில் பகத் ஃபாசில் நடித்த ரத்னவேல் போன்ற ஒரு கதாபாத்திரம் இருக்க கூடாது என்கிற நோக்கத்துடன் மாரி செல்வராஜ் படத்தை இயக்கிய நிலையில், பகத் ஃபாசிலின் நடிப்பை பார்த்து வியந்து போன ஒரு கூட்டம் அவரையே ரோல் மாடலாக மாற்றிக் கொண்டது தான் மிகப்பெரிய அபத்தமாக மாறிப்போனது. டியூட் படத்தில் சரத்குமார் அதியமான் அழகப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் தான் அந்த படம் வெற்றிப் பெறவே காரணம் என்றும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சிலர் கம்பு சுத்த ஆரம்பித்து விட்டனர்.

ஆண் பாவம் பொல்லாதது: கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியாகி கடந்த மாதம் வெற்றிப் பெற்ற படமாக மாறிய ஆண் பாவம் பொல்லாதது படத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தமிழ்நாட்டில் உள்ள சிலர் வைத்துள்ளனர். அந்த படத்தை கொண்டாடும் ரசிகர்களும் உள்ளனர். அந்த படத்தில் இயக்குநர் எல்லா பெண்களையும் pseudo feminist (போலி பெண்ணியவாதி) என சொல்லவில்லை. ஆனால், அப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் என்பதை இயக்குநர் இந்த படத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். அதே சமயம், ஆண்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. படத்தின் கிளைமேக்ஸில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ இருவருக்கும் இடையே உள்ள ஈகோவை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அதனால் தான் பல விவாகரத்துகள் நடப்பதாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார்.

இந்தி வரை சென்ற பஞ்சாயத்து: ஆனால், வழக்கம் போல பெண்களுக்கு எதிராக படத்தில் இருக்கும் காட்சிகளை மட்டுமே ரீல்ஸ்களாக ஷேர் செய்து பஞ்சாயத்தை ஆன்லைன் அட்மின்கள் ஆரம்பித்து விட்டனர். இந்தி டப்பிங் வெர்ஷன் வரை தற்போது "அம்மணமாக பெண்கள் சென்றாலும், ஆண்கள் தப்பாக பார்க்கக் கூடாது" என மாளவிகா மனோஜ் பேசும் காட்சிகளை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். இதற்கு கடுமையான கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X