கோலமாவு கோகிலாவோட இந்தி ரீமேக்கும் ரெடி.. ஓடிடியில் ரிலீஸ்.. எப்போ ரிலீஸ் ஆகுதுன்னு தெரியுமா!

மும்பை : நடிகை நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது கோலமாவு கோகிலா.

முதல் படத்திலேயே நயன்தாராவை வைத்து இந்தப் படத்தை இயக்கி வெற்றிப் படமாகவும் ஆக்கினார் நெல்சன் திலீப்குமார்.

தற்போது இந்தப் படம் பாலிவுட்டில் ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ளது. நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலமாவு கோகிலா படம்

கோலமாவு கோகிலா படம்

நடிகை நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் கோலமாவு கோகிலா. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே நயன்தாராவை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

யோகிபாபு கேரக்டர்

யோகிபாபு கேரக்டர்

இந்தப் படத்தின் மேக்கிங்கே அவருக்கு தொடர்ந்து டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. அந்த அளவிற்கு உடல்நலம் சரியில்லாத தன்னுடைய தாயை காப்பாற்றும் நோக்கத்தில் அவர் கடத்தலில் ஈடுபடுவதாகவும், அது தெரியாமல் அவரை காதலிக்கும் யோகிபாபு அதில் மாட்டிக் கொள்வதுமாக கதை நகரும்.

பாலிவுட்டில் ரீமேக்

பாலிவுட்டில் ரீமேக்

இந்நிலையில் சிறப்பான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம் தற்போது பாலிவுட்டிலும் இயக்கப்பட்டுள்ளது. குட் லக் ஜெர்ரி என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் -ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் நடித்துள்ளார். நயன்தாராவின் கேரக்டரில் இவர் நடித்துள்ளார்.

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்

இந்தப் படத்தை சித்தார்த் சென்குப்தா இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ், கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ் மற்றும் மகாவீர் ஜெயின் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. இந்நிலையில் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 29ல் ரிலீஸ்

ஜூலை 29ல் ரிலீஸ்

வரும் ஜூலை 29ம் தேதி குட் லக் ஜெர்ரி படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இதுகுறித்து படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தன்னுடைய இயல்பான நடிப்பால் இந்தப் படத்தில் நயன்தாரா ஸ்கோர் செய்திருந்த நிலையில், தற்போது ஜான்வி கபூர் இந்தக் கேரக்டரில் எப்படி நடித்துள்ளார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X