மார்பக புற்றுநோயால் போராடும் நடிகை.. சிறுநீரக பையுடன்.. உருக்கமான பதிவு!

சென்னை: இந்தி தொலைக்காட்சி சீரியல் நடிகை ஹினா கான், பிக் பாஸ் மற்றும் காட்ரான் கே கிலாடி உட்பட பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானார்.அதைத்தொடர்ந்து, ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை என்ற தொலைக்காட்சி தொடரில், அக்ஷரா மகேஸ்வரி சிங்கானியாவாக அவர் நடித்த கதாபாத்திரத்தில் அனைவராலும் அறியப்பட்டார். தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் இவர், மருத்துவமனையில் கையில் சிறுநீரக பையை வைத்துக்கொண்டு நடந்து செல்லும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

hina khan breast cancer

கடந்த ஜூன் மாதம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. இது வதந்தி என சொல்லப்பட்ட நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து பகிர்ந்த இவர், அண்மையில் இணையத்தில் ஒரு செய்தி பரவியது.அந்த செய்தி உண்மை தான், நான் மூன்றாம் நிலை மார்பக புற்றுநோயால், பாதிக்கப்பட்டு இருக்கிறேன். இந்த நோயால் பாதிக்கப்பட்ட போதும், நான் நலமாக இருக்கிறேன்.நான் வலிமையாகவும், உறுதியாகவும், இந்த நோயைக் கடக்க முழுமையாக தயாராகி விட்டேன். தற்போது எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும்,இந்த நோயில் இருந்து நான் முழுமையாக வெளியேறுவதற்கு தேவையான அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

hina khan breast cancer

இதைத்தொடர்ந்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்,சிகிச்சைக்காக தனது தலைமுடியை வெட்டி வீடியோவை பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல்களை கூறி வந்தனர்.

hina khan breast cancer

மார்பக புற்றுநோய்:இந்நிலையில், தற்போது ஹினா கானுக்கு இன்ஸ்டாகிராமில், மருத்துவமனையில் நோயாளியின் உடையில் கையில் சிறுநீரக பையுடன் நடந்து செல்லும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக, வாழ்க்கை பிரகாசமான பக்கத்தை நோக்கி நடக்கிறேன். நோயில் இருந்து ஒரு படி முன்னேறி இருக்கிறேன். அதற்கு நன்றி என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினைப்பார்த்த ஹினாவின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அவருக்கு ஆறுதலை கூறிவருகின்றனர். அவரின் நண்பர் சுனில் குரோவர், விரைவாக குணமடையுங்கள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். அவரின் ரசிகை ஒருவர், என் ஆழ்மனத்தில் இருந்து உனக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

hina khan breast cancer

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X