ஒரு எபிசோடுக்கு பல கோடி சம்பளம் வாங்கும் நடிகை..23 வயதில் 250 கோடி சொத்து..யார் அந்த நடிகை?
சென்னை: இரண்டரை மணி நேரத்தில் முடிந்துவிடும் சினிமாவை விட தினம் தினம் தொலைக்காட்சியில் வரும் சீரியலை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால், சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு பல தொலைக்காட்சி நிறுவனங்கள் சம்பளத்தை வாரி வாரி கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஒரு எபிசோடுக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது அந்த நடிகை யார் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

23 வயதே ஆன ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி மும்பையில் பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்தது. இதற்காக முயற்சி செய்து கொண்டிருந்த இவர்,Star One's medical romance Dill Mill Gayye என்ற படத்தில் தமன்னாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காஷியில் நடித்தன் மூலம் பிரபலமான இவர், அப் நா ரஹே தேரா ககாஸ் கோரா, புல்வா மற்றும் து ஆஷிகியில் பங்க்டி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர். கலர்ஸ் தொலைக்கட்சியில் ஃபியர் ஃபேக்டர்: காட்ரான் கே கிலாடி 12 இல் கலந்து கொண்டு 4வது இடத்தைப் பிடித்தார்.

ஒரு எபிசோடுக்கு அதிக சம்பளம்: இப்படி சின்ன சின்ன ரோலில் நடித்து பிரபலமான நடிகை ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி தொலைக்காட்சி துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளதாக கூறப்படுகிறது. 23 வயதில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் இவரின் சொத்து மதிப்பு மட்டும் 250 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ஒரு எபிசோடுக்கு ரூ.18 லட்சம் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் பிரபலமான தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் 'நவ்வு செஃப்' என்கிற சமையல் நிகழ்ச்சிக்கு மட்டும் ஒரு எபிசோடிற்கு ரூ.2 லட்சம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சமூக சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஷாருக்கானுக்கே டஃப் கொடுப்பாரோ: இப்படி இந்த நடிகை எங்கு சென்றாலும் அதற்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுவதால், 23 வயதிலேயே இந்த ரூ.250 கோடி சொத்துக்கு அதிபதியாகி உள்ளார். பல பாலிவுட் நடிகர்களே, மும்பையில் சொந்தமாக வீடு வாங்காத நிலையில் இவர் 2 வருடத்திற்கு முன்பே மும்பையில் வீடு வாங்கி விட்டார். இப்படியே சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் ஷாருக்கானை விட அதிகம் சொத்துவைத்து இருக்கும் நடிகையாக மாறிவிடுவார் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











