twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி கத்துக்கலாமா, வேண்டாமா? என்ன சொல்ல வருகிறார் உதயநிதி? லால் சிங் சத்தா விழாவில் சுவாரஸ்யம்

    |

    சென்னை: பாலிவுட்டில் அமீர்கான், கரீனா கபூர். நாக சைத்தன்யா நடித்துள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது.

    இந்தப் படத்தை தமிழில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

    இந்நிலையில், 'லால் சிங் சத்தா' திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்தி கற்றுக்கொள்வது குறித்து உதயநிதி பேசியுள்ளார்.

    கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் இருந்து விலகும் மனிஷா அஜித்...அதிர்ச்சியில் ரசிகர்கள் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் இருந்து விலகும் மனிஷா அஜித்...அதிர்ச்சியில் ரசிகர்கள்

    எதிர்பார்ப்பில் லால் சிங் சத்தா

    எதிர்பார்ப்பில் லால் சிங் சத்தா

    ஹாலிவுட்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்ற 'ஃபாரஸ்ட் கம்ப்' படம், தற்போது இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் முன்னணி ஹீரோ அமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாக சைத்தன்யா கேரக்டரில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தமிழில் ரெட் ஜெயன்ட் ரிலீஸ்

    தமிழில் ரெட் ஜெயன்ட் ரிலீஸ்

    அத்வைத் சந்தன் இயக்கியுள்ள 'லால் சிங் சத்தா' படம், இந்தியில் உருவாகியிருந்தாலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகிறது. வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை பார்க்க, ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தப் படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது.

    லால் சிங் சத்தா பத்திரிகையாளர்கள் சந்திப்பு

    லால் சிங் சத்தா பத்திரிகையாளர்கள் சந்திப்பு

    இந்நிலையில், 'படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக 'லால் சிங் சத்தா' படக்குழுவினர் சென்னை வந்திருந்தனர். அதில், அமீர்கான், நாக சைத்தன்யா ஆகியோருடன், உதயநிதியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய உதயநிதி, "லால் சிங் சத்தா' இந்தி படம் என்பதால், அதையாவது வாங்காமல் விட்டு வைக்கலாம் என்று இருந்ததாக ஜாலியாகக் கூறினார். ஆனால், அமீர்கான் நேரடியாக என்னிடம் பேசியதால், 'லால் சிங் சத்தா' படத்தை வாங்கியதாகத் தெரிவித்தார்.

    விருப்பம் இருந்தா கத்துக்கலாம்

    விருப்பம் இருந்தா கத்துக்கலாம்

    அப்போது பத்திரிகையாளர் ஒருவர் 'இந்தி தெரியாது போடான்னு சொல்றீங்க, ஆனா, இந்திப் படத்த வாங்கி ரிலீஸ் பண்றது சரியா?" என்பதுபோல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உதயநிதி, "இந்தி கற்பதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும் கத்துக்கலாம். இந்தி திணிப்பு தான் தவறு. அதை தான் எதிர்க்கிறோம் என்றும், மொழியை தாண்டி அவரது ரசிகன் நான். அவர் படங்களை பார்த்திருக்கிறேன். இதை ஒரு ரசிகனாக வெளியிடுவதாக எடுத்து கொள்ளலாம் என்று கூறினார்.

    கொள்கைக்கும் இந்திக்கும் தொடர்பில்லை

    கொள்கைக்கும் இந்திக்கும் தொடர்பில்லை

    உதயநிதி கூறியது போல், தமிழகத்தில் இதுவரை இந்தி திணிப்புக்கு மட்டுமே எதிர்ப்பு இருப்பதாக, நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், எம்.ஜி.ஆரின் பல படங்கள் இந்தியில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது தான் என்பதையும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அதேபோல், தமிழில் இருந்து ரஜினி, கமல் உள்ளிட்ட சில இந்திப் படங்களில் நடித்துள்ளதாகவும், இப்போது தனுஷ், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் பாலிவுட் படங்களில் நடித்து வருவதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    English summary
    "Hindi theriyathu poda": Udayanidhi's comment while keeping Aamir Khan... Aamir Khan is upset!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X