»   »  ஏஆர் ரஹ்மான் கச்சேரி... யார் ஊரில் யார் முதலாளி?

ஏஆர் ரஹ்மான் கச்சேரி... யார் ஊரில் யார் முதலாளி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டனில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் கச்சேரியும் அதன்பின்பான வட இந்தியர்களின் புறக்கணிப்பும், எதிர்வினையும் நமக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தரும் அருமையான 'case study'. அந்த நிகழ்ச்சியின் பெயர், 'நேற்று இன்று நாளை'. அதாவது நிகழ்ச்சிக்கு பெயரே தமிழில்தான் சூட்டியிருக்கிறார் ரஹ்மான்.

அந்த நிகழ்ச்சிக்கு சென்று இந்தி பாடல்களை எதிர்பார்ப்பது மிலிட்டரி ஹோட்டலுக்கு சென்று சுத்த சைவத்தை எதிர்பார்ப்பதைப் போன்ற செயல். அப்படியும் கூட 28 பாடல்களில் 16 பாடல்களை இந்தியிலும், வெறும் 12 பாடல்களை மட்டுமே தமிழிலும் பாடியிருக்கிறார் ரஹ்மான். இந்த விஷயத்தில் ரஹ்மான் மேல் எனக்கு வருத்தம்தான்.

Hindiwalas and London AR Rahman Music program

அதாவது அங்கு கூடியிருந்த தமிழர்கள் 16 இந்திப் பாடல்களையும், 12 தமிழ் பாடல்களையும் ஒருசேர ரசித்திருக்கிறார்கள். ஆனால் அங்கு கூடியிருந்த இந்தி எருமைகளால் (எருமைகள் மன்னிக்க) 12 தமிழ் பாடல்களைக் கூட பொறுமையாக கேட்க முடியவில்லை. பாதியில் எழுந்து போயிருக்கிறார்கள். இந்தியாவுக்கு ஆஸ்கர் வாங்கித்தந்த ரஹ்மானைப் பற்றி டிவிட்டரில் ஒப்பாரி வைக்கிறார்கள். நிற்க.

ஒருமுறை 'ரசிகா ரசிகா' என்ற ரஹ்மானின் பாடலை நான் கேட்டுக் கொண்டிருந்தபோது அறைக்குள் வந்த நண்பன், "மச்சி இந்தப் பாட்டை இந்தில கேளு சூப்பரா இருக்கும்," என்றான். அவனுக்கும் இந்தி தெரியாது, எனக்கும் தெரியாது. ஆனால் நம் ஆட்களுக்கு இயல்பாகவே அப்படி ஒரு புத்தி. இது ஒருமுறை அல்ல, பலமுறை நடந்திருக்கிறது. உயிரே பாடல்களுக்கு வைரமுத்து அற்புதமாக வரிகளை எழுதியிருப்பார்.

இன்னும் சொல்லப்போனால் மணிரத்னத்தின் படங்கள் எல்லாவற்றுக்குமே முதலில் தமிழில் வைரமுத்துவினால் வரிகள் எழுதப்பட்டு பின்புதான் இந்திக்கு செல்லும். ஆனால் நம் ஆட்கள் எல்லோரும் 'இந்தில சூப்பரா இருக்கும், இந்தில சூப்பரா இருக்கும்,' என தமிழ் பாடல்களை இந்தியில் கேட்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் 16 பாடல்கள் இந்தியில் பாடப்பட்டும், தமிழில் பெயரிடப்பட்ட நிகழ்ச்சியில் வெறும் 12 தமிழ் பாடல்கள் பாடப்படுவதையே இந்தி வெறியர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

Hindiwalas and London AR Rahman Music program

'பெரிய இவரு. இந்திப் பாட்டுதான் கேப்பாரு' என சாதாரணமாக இங்கே சொல்லப்படுவதுண்டு. இது கூட பரவாயில்லை. "எங்க ஷ்ருதிக்கு இந்திதான் தெரியும். தமிழ்னா அவ்ளோ கஷ்டப்படுவா. ஹி ஹி..." என தமிழச்சிகள் பெருமிதத்தோடு சொல்வதையும் எவ்வளவு பார்க்கிறோம். இப்படியெல்லாம் கொஞ்சம்கூட வெட்கம், மானம், சூடு, சொரணையே இல்லாமல் பேசும் இனம் உலகத்தின் எங்காவது இருக்குமா?

அடிமைத்தன மீட்சியில் மிகவும் சவாலாக இருக்கும் விஷயம் எது தெரியுமா? அடிமைகளுக்கு அவர்கள் அடிமைகள் என புரியவைப்பதுதான். தமிழர்கள் படித்த அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள இந்த ஏ.ஆர்.ரஹ்மானின் சம்பவம் மற்றொரு உதாரணம். இதற்கும் நம் ஆட்களில் பலர், 'எல்லா இந்திக்காரங்களும் அப்படி இல்ல' என வக்காலத்து வாங்குவார்கள். அப்படியெல்லாம் இல்லை. எல்ல்ல்ல்லா இந்திக்காரனும் இப்படித்தான். இந்தியா அவன் சொத்து என்ற நினைப்பில்தான் வாழ்கிறான். இந்தி கற்பது ஏனைய எல்லா மொழியினருக்கும் கட்டாயக் கடமை என நினைக்கிறான்.

அந்த திமிரில்தான் தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் "இந்தி நஹி மாலும்?" என்று திமிர்த்தனமாக கேட்க முடிகிறது. இன்று பாஜக அரசு இந்தித் திணிப்பை கடுமையாக செயல்படுத்துவதால் இவர்களுக்கு இந்த திமிர், இந்த ஆதிக்கம், இந்த அதிகாரம் இன்னும் வேகமாகப் பீறிடுகிறது.

ஏற்கனவே நீட் தேர்வினால் நம் கல்வி உரிமை களவாடப்பட்டுவிட்டது. எத்தனையோ தமிழர்கள் மருத்துவர்கள் ஆவதை வெற்றிகரமாக நிறுத்திவிட்டு, நம் மாநில அரசு இத்தனை ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும் கல்வி நிலையங்களில் வெட்கமே இல்லாமல் வட இந்திய மாணவர்கள் குறுக்கு வழியில் குடியேறப் போகிறார்கள்.

வேட்டி கட்டிய தொடை நடுங்கிகள் நம் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் சூழலில் நாம் என்ன செய்யப்போகிறோம்? குறைந்தபட்சம் இந்தியை நோக்கிய நம் மக்கள் பலரின் மனநிலையை முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

Hindiwalas and London AR Rahman Music program

இந்தி தெரிந்தாலும் இனி தமிழ்நாட்டுக்குள் இந்தி பேசாதீர்கள். இந்திக்காரர்களிடம் தமிழிலோ, ஆங்கிலத்திலோ மட்டுமே பேசுங்கள்.

எந்த வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தாலும் தமிழை தேர்வு செய்யுங்கள். அலைக்கழித்தால் கடுமையாக கண்டனத்தை தெரிவியுங்கள்.

ஏ.டி.எம்களில் தமிழில் தேர்ந்தெடுங்கள். தமிழ் இல்லாத பட்சத்தில் அந்த வங்கியின் கால் செண்டரில் தெரிவியுங்கள். முடிந்தால் காரணத்தை சொல்லிவிட்டு கணக்கை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

நண்பர்கள் வீட்டிலோ, சொந்தக்காரர்கள் வீட்டிலோ எவனாவது தங்கள் குழந்தைக்கு தமிழ் தெரியாது எனச் சொன்னால் அது பெருமை இல்லை, வெட்கப்பட வேண்டிய விஷயம் என எந்த தயவும் பார்க்காமல் முகத்துக்கு நேராகச் சொல்லுங்கள்.

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள். நியூமராலஜியெல்லாம் பார்த்து சீரழியாதீர்கள். நியூமராலஜி பார்த்து பெயரை மாற்றிய விஜய.டி.ராஜேந்தர் என்ன முதல்வர் ஆகிவிட்டாரா? கான்ஃபிடண்ட்டான காமடியனாகத்தானே இன்னும் வலம் வருகிறார்!!

உலகத்தில் மிக அதிகமான முட்டாள்கள், சராசரிக்கும் குறைவான IQ உள்ளவர்கள் எந்த மொழி பேசுகிறார்கள் என ஆய்வு செய்தால் இந்தி முதலிடத்தில் இருக்கும் என அவர்களின் தொடர்ச்சியான செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகின்றவன் என்ற வகையில் உறுதியாக நம்புகிறேன். அதுபோக வரலாற்றுத் தொன்மை, இலக்கிய இலக்கண வளம் என எதுவுமே இல்லாத இந்தியைப் பேசுவது பெருமையும் அல்ல.

யார் ஊரில் யார் முதலாளிகள் என்பதைக் காட்டவேண்டிய அத்தியாவசிய தருணம் இது. காட்டுங்கள்.

-டான் அசோக்

English summary
Don Ashok's write up on the boycott of Hindi people in AR Rahman's London concert
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil